»   »  ராதா மோகனோடு மீண்டும் இணையும் அருள்நிதி!

ராதா மோகனோடு மீண்டும் இணையும் அருள்நிதி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இயக்குநர் ராதா மோகனும் நடிகர் அருள் நிதியும் முதல் முறையாக இணைந்த படம் பிருந்தாவனம். இன்னும் ரிலீசாகவில்லை. இந்த நிலையில் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார்கள்.

இதுகுறித்து அருள்நிதி கூறுகையில், "பிருந்தாவனம் படம் மிக அழகாக உருவாகி இருப்பதை எண்ணி, ஒட்டுமொத்த படக்குழுவினரும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். எனக்கும், ராதா மோகன் சாருக்கும் இடையே எப்போதும் ஒரு நல்ல புரிதல் உண்டு. அவருடன் இணைந்து பணியாற்றும் போது எனக்கு சிறப்பான அனுபவம் கிடைக்கிறது.

Arulnidhi joins with Radha Mohan again

தற்போது நாங்கள் இருவரும் மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இணைந்திருப்பது எங்களுக்கு அளவு கடந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

கதைக்களத்தை முடிவு செய்துவிட்டோம். விரைவில் படத்தின் தலைப்பை அறிவிக்கப் போகிறோம்.

தற்போது படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர் - நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகின்றது. வருகின்ற ஜூலை மாதம் முதல் படத்தின் வேலைகள் ஆரம்பமாகும்," என்றார்.

English summary
Arulnidhi - Director Radha Mohan are joining together again for a new project.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil