Diary Twitter Review: அருள்நிதியின் தொடரும் ‘D' டைட்டில் சென்டிமென்ட்.. டைரி படம் எப்படி இருக்கு?
சென்னை: விஜய்சேதுபதி, கார்த்திக்கே டஃப் கொடுப்பாரு போல அருள்நிதி. சில மாதங்களிலேயே அடுத்தடுத்து 3 படங்களை இறக்கி உள்ளார்.
டி- பிளாக், தேஜாவு என தொடர்ந்து இரு படங்களும் D டைட்டிலில் வெளியான நிலையில், அதே வரிசையில் இன்று வெளியாகி உள்ள படம் தான் டைரி.
இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் இன்று வெளியான டைரி திரைப்படம் வொர்த்தா இல்லையா? என்பது குறித்து ட்விட்டர் வாசிகள் என்ன சொல்லியிருக்காங்க என்பதை இங்கே பார்ப்போம்..

பிரசாந்த் ரங்கசாமி விமர்சனம்
அருள்நிதியின் டைரி படத்தின் முதல் பாதி இப்போதான் பார்த்து முடித்தேன். இதுவரை படம் பிரில்லியன்ட்டாக உள்ளது. அருள்நிதியின் கெட்டப் சரியாக படத்துக்கு பொருந்துகிறது. இடைவேளை காட்சியில் சில ட்விஸ்ட்களை ரிவீல் செஞ்சிருக்காங்க.. அடுத்த பாதி எப்படி இருக்குன்னு பார்த்துட்டு சொல்றேன் என டைரி படத்தின் ஃபர்ஸ்ட் ஹாஃப் விமர்சனத்தை கூறியுள்ளார்.

ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்
இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியாகி உள்ள டைர் திரைப்படம் தரமாக இருக்கிறது. ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் வைத்து இயக்குநர் மிரட்டி எடுத்துள்ளார். படம் பிளாக்பஸ்டர் மெட்டீரியல் என இந்த நெட்டிசன் தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

ஹாரர் த்ரில்லர்
டைரி படத்தின் ஃபர்ஸ்ட் ஹாஃப் வெறித்தனம். ஹாரர் பிளஸ் த்ரில்லர் படமாக இந்த படம் இருக்கு. அருள்நிதி மறுபடியும் தான் ஒரு சரியான கிரைம் த்ரில்லர் சப்ஜெக்ட்டை தேர்ந்தெடுக்கும் ஹீரோ என்பதை நிரூபித்துள்ளார். நிச்சயம் இந்த படம் அவருக்கு நல்ல வெற்றியைத் தேடித் தரும் என இந்த ரசிகரும் தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

வின்னர்
த்ரில்லர் பட விரும்பிகள் நிச்சயம் இந்த படத்தை மிஸ் பண்ணக் கூடாது. அந்தளவுக்கு திரைக்கதையை வலுவாக எழுதி இயக்கி உள்ளார் இயக்குநர். அதே போல அருள்நிதியின் நடிப்பு மிரட்டலாக உள்ளது. தியேட்டருக்கு சென்று நிச்சயம் பார்க்க வேண்டிய படம் இது என இந்த நெட்டிசன் தனது கருத்தை கூறியுள்ளார்.

ரேட்டிங் எகிறுது
அருள்நிதியின் டைரி படத்துக்கு இந்த ரசிகர் 3.75 ரேட்டிங் கொடுத்துள்ளார். மேலும், சில ரசிகர்கள் 4 மற்றும் 4.5 வரை அதிக ரேட்டிங்குகளை கொடுத்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் 275க்கும் அதிகமான திரையரங்குகளில் டைரி படத்தை வெளியிட்டுள்ள நிலையில், படத்திற்கு கிடைத்து வரும் பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக மேலும், திரையரங்குகள் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











