என்னது...தனுஷின் கேப்டன் மில்லர் கதை இதுவா...மனம் திறந்த டைரக்டர்

சென்னை : தனுஷ் அடுத்ததாக நடிக்க உள்ள கேப்டன் மில்லர் படத்தின் கதை பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகிறது. இந்நிலையில் இந்த குழப்பங்கள் பற்றி முதல் முறையாக ஓப்பனாக பேசியதுடன், இதற்கு முற்றுப்புள்ளியும் வைத்துள்ளார் டைரக்டர் அருண் மாதேஸ்வரன்.

2021 ம் ஆண்டு ராக்கி படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்கு டைரக்டராக அறிமுகமானவர் அருண் மாதேஸ்வரன். தனது இரண்டாவது படமே செல்வராகவன், கீர்த்தி சுரேஷை மாறுபட்ட ரோலில் நடிக்க வைத்து சாணி காயிதம் படத்தை எடுத்துள்ளார். இந்த படம் ஓடிடி.,யில் இந்த மாதம் நேரடியாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

தனுஷின் அடுத்த படம்

தனுஷின் அடுத்த படம்

சாணி காயிதம் படம் 1980 களில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட படம் என கூறப்படுகிறது. இந்நிலையில் மூன்றாவதாக தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்க, தனுஷிடம் கதை சொல்லி ஓகே வாங்கி உள்ளார் அருண் மாதேஸ்வரன். கேப்டன் மில்லர் என தற்காலிகமாக இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

கேப்டன் மில்லர் கதை இதுவா

கேப்டன் மில்லர் கதை இதுவா

கேப்டன் மில்லர் கதை இலங்கை எல்டிடிஇ இயக்கத்தை சேர்ந்த கேப்டன் மில்லர் என்பவரின் வாழ்க்கையை தான் படமாக எடுக்க போகிறார்கள் என ஒரு தகவல் கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. இந்நிலையில் இது பற்றிய சமீபத்திய பேட்டி ஒன்றில் டைரக்டர் அருண் மாதேஸ்வரனிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், எல்டிடிஇ இயக்க தலைவர் கேப்டன் மில்லரின் வாழ்க்கை கதையில் தனுஷ் நடிக்கவில்லை.

விளக்கம் சொன்ன டைரக்டர்

விளக்கம் சொன்ன டைரக்டர்

அதிகப்படியான ரசிகர்களை கவர இதை பெரிய பட்ஜெட் படமாக எடுக்க திட்டமிட்டுள்ளோம். இந்த படத்தில் அயிட்டம் சாங்கே இருக்காது. தனுஷ் நடிக்க உள்ள படத்தின் கதை, டார்க் காமெடி கதையாகும். ஆக்ஷன் சாகசங்கள் நிறைந்ததாகவும், தன்னுடைய முந்தைய இரண்டு படங்களில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டதாகவும் இருக்கும் என்றார்.

எப்போ ஷுட்டிங்

எப்போ ஷுட்டிங்

தனுஷ் - அருண் மாதேஸ்வரன் இணையும் படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறதாம். தனுஷ் தற்போது நடித்து வரும் வாத்தி படத்தின் ஷுட்டிங் நிறைவடைந்த பிறகு இந்த ஆண்டு இறுதிக்குள் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாம். தனுஷ் - அருண்மாதேஸ்வரன் இணையும் படத்தையும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் பெரிய பொருட் செலவில் தயாரிக்க உள்ளதாம்.

அடுத்தடுத்து ரிலீசாகும் தனுஷ் படங்கள்

அடுத்தடுத்து ரிலீசாகும் தனுஷ் படங்கள்

தனுஷ் தற்போது நானே வருவேன், திருச்சிற்றம்பலம், வாத்தி ஆகி படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் நானே வருவேன், திருச்சிற்றலம்பலம் படங்களின் ஷுட்டிங் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. இரு படங்களும் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாரகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X