twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பைக் மீது லாரி மோதி.. இளம் இயக்குனர் பரிதாப பலி.. ஷங்கரிடம் பணியாற்றியவர்.. திரையுலகம் அதிர்ச்சி!

    By
    |

    கோவை: பைக் மீது லாரி மோதியதில் இளம் இயக்குனர் மரணமடைந்த சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    Recommended Video

    Director Shankar AD Varun Prasath No more | ஐ Assistant Director

    ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடித்துள்ள படம், 4G. காயத்ரி சுரேஷ், சுரேஷ் மேனன், சதிஷ் உட்பட பலர் நடித்துள்ளனர்.

    ஆர்.வேல்ராஜ் இசை அமைத்த இந்தப் படத்தை சி.வி.குமார் தயாரித்துள்ளார்.

    அது எதுவும் இல்லை.. வெறும் பிட்டுத்துணிதான்.. முழுவதையும் காட்டிய நடிகை.. தீயாய் பரவும் போட்டோ!அது எதுவும் இல்லை.. வெறும் பிட்டுத்துணிதான்.. முழுவதையும் காட்டிய நடிகை.. தீயாய் பரவும் போட்டோ!

    வெங்கட் பக்கர்

    வெங்கட் பக்கர்

    படப்பிடிப்பு எப்போதோ முடிந்துவிட்டாலும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இதை வெங்கட் பக்கர் இயக்கியுள்ளார். இவரது ஒரிஜினல் பெயர் அருண் பிரசாத். படத்துக்காக வெங்கட் பக்கர் என்று மாற்றி வைத்துள்ளார். கோயமுத்தூர் அருகில் உள்ள அன்னூரைச் சேர்ந்த இவர், லாக்டவுன் காரணமாக சொந்த ஊருக்குச் சென்றிருந்தார்.

    மோதியது

    மோதியது

    இன்று காலை பைக்கில் சென்று கொண்டிருந்தார். மேட்டுப்பாளையம் அருகே சென்றபோது லாரி எதிர்பாராத விதமாக மோதியதில் அருண் பிரசாத் பலத்த காயமடைந்தார். அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    நாளைய இயக்குனர்

    நாளைய இயக்குனர்

    இளம் இயக்குனர் ஒருவர் திடீரென உயிரிழந்திருப்பது சினிமா துறையினரை கவலையில் ஆழ்த்தி இருக்கிறது. அருண் பிரசாத், கலைஞர் டிவியில் வெளியான, நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் பங்குபெற்றவர். பிறகு இயக்குனர் ஷங்கரிடம் 'ஐ' படத்தில் உதவி இயக்குனராக சேர்ந்தார். அதற்குப் பிறகு 4 ஜி படத்தை இயக்கினார். இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை.

    ராட்சசன் இயக்குனர்

    ராட்சசன் இயக்குனர்

    என்றாலும் அடுத்த படத்தை இயக்குவதற்கான முயற்சியில் இருந்தார். அதற்குள் இப்படியாகிவிட்டது என்று அவரது சினிமா வட்டார நண்பர்கள் தெரிவித்துள்ளனர். முண்டாசுபட்டி, ராட்சசன் படங்களின் இயக்குனர் ராம்குமார், கூறும்போது, 'இப்போது அன்னூரில் உள்ள அவரது வீட்டுக்குத்தான் சென்று கொண்டிருக்கிறோம். நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் நாங்கள் பங்குபெற்றபோது, அந்த செஷனின் சிறந்த ஷார்ட் பிலிம்கான விருதை நானும் அருண் பிரசாத்தும்தான் வாங்கினோம்.

    ரிலீஸ் ஆகியிருந்தால்

    ரிலீஸ் ஆகியிருந்தால்

    நான், அருண்பிரசாத், மரகத நாணயம் இயக்குனர் இயக்குனர் சரவணன், அயலான் இயக்குனர் ரவிகுமார் ஆகியோர் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் அதிக நட்புடன் இருந்தோம். லாக்டவுனுகாக அவர் ஊருக்கு வந்திருந்தார். இந்த நேரத்தில் இப்படியாகி விட்டது, வருத்தமாக இருக்கிறது. அவர் படம் ரிலீஸ் ஆகியிருந்தால் வேற மாதிரி ஆகியிருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது என்றார்.

    English summary
    Arun prasad director of 4G killed in road accident
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X