»   »  சாஹோ... இனி ஓஹோதான்... 'பிரபாஸுடன் இணையும் தமிழ் நடிகர் உற்சாகம்!

சாஹோ... இனி ஓஹோதான்... 'பிரபாஸுடன் இணையும் தமிழ் நடிகர் உற்சாகம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'பாகுபலி -2' என்ற பிரம்மாண்ட வெற்றிப் படத்தைக் கொடுத்த நடிகர் பிரபாஸ், சுஜித் இயக்கத்தில் நடிக்கும் திரைப்படம் 'சாஹோ'. இந்தப் படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு ரிலீஸாகி வைரலானது.

த்ரில்லர் படமான இது தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளத்தில் உருவாகவுள்ளது. படத்தில் பிரபாஸுக்கு நாயகியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் கமிட்டாகி இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

Arun vijay act with prabhas

இப்படத்திற்கான படப்பிடிப்பு முன்பே தொடங்கியுள்ள நிலையில், பிரபாஸ் சமீபத்தில்தான் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இந்த நிலையில் இப்படத்தில் அருண் விஜய் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறாராம். இந்தத் தகவலை அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அருண் விஜய் தற்போது மகிழ் திருமேணியின் 'தடம்' படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி அவர், 'சாஹோ படத்தில் நடிக்கக் கேட்டார்கள். என்னிடம் கதையைப் பற்றி பேசினார்கள். 'பாகுபலி' படத்துக்குப் பிறகு, 'சாஹோ' படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கு. அப்படிப்பட்ட படத்தில் என்னை நடிக்கக் கேட்டதே எனக்கு ஹேப்பி. பிரபாஸூடன் நடிப்பது மகிழ்ச்சியான விஷயம்.' எனக் கூறியுள்ளார்.

English summary
Arun vijay was play a role in Saaho film which was lead by prabhas. He announced this update officially via twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil