Just In
- 24 min ago
யோகேஸ்வரன் நினைவாக.. ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு தங்கக் காசு பரிசு.. நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவிப்பு!
- 36 min ago
பிக்பாஸ் கிராண்ட் ஃபினாலேவில் கவின்.. டிரெண்டாகும் #Kavin.. கொண்டாடும் ரசிகர்கள்!
- 51 min ago
நாடி பட படக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள்..செம சூடா இருக்கு.. உசுப்பேத்தும் கமல்..இரண்டாவது ப்ரோமோ!
- 1 hr ago
'ஆன்மாவின் கண்ணாடின்னு சொல்றாங்களே..?' முன்னாள் ஹீரோயின் வெளியிட்ட வாவ் போட்டோஸ்!
Don't Miss!
- News
எல்லாம் தெளிவா பேசுறீங்க.ஏன் விவசாயிகளுக்கு ரூ.6,000 கொடுக்கவில்லை..காங்கிரசுக்கு, அமித்ஷா கேள்வி!
- Sports
சீனியர் வீரர்களால் கூட முடியலை.. ஆனால் இவர்.. தமிழக வீரரை தூக்கி வைத்து கொண்டாடிய நிக் நைட்!
- Finance
ஆர்பிஐ-யின் கொள்கைகள் பொருளாதாரத்தினை மேம்படுத்த உதவின.. சக்திகாந்த தாஸ் பளிச்..!
- Automobiles
ஒருபக்கம் விலை அதிகரிப்பு, மறுபக்கம் சலுகை!! மோட்டார்சைக்கிள் விற்பனையில் கவாஸாகியின் அடுத்தடுத்த அறிவிப்புகள்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எனது பெயரில் பெண்களை ஏமாற்றுகிறார்கள்.. அருண்விஜய் எச்சரிக்கை!
சென்னை : சூர்யாவை வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள அதிரடி இயக்குனர் ஹரி இப்பொழுது முதன் முறையாக அருண் விஜய் நடிக்கும் திரைப்படத்தை இயக்குகிறார்.
தொடர் வெற்றி படங்களின் மூலம் தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்து வரும் நடிகர் அருண் விஜய் மீண்டும் குற்றம் 23 இயக்குனருடன் இணைந்து புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
தேசத்தோடு ஆரி ஒட்டி வாழலையாம்.. ரம்யா சொல்றாங்க.. அப்புறம் எப்படி மக்கள் சப்போர்ட் ஆரிக்கு இருக்கு?
அருண் விஜய்யின் ஒவ்வொரு திரைப்படங்களும் வித்தியாசமாக இருக்கின்ற நிலையில் ரசிகர்கள் இடம் பெறும் வரவேற்பை பெற்றுவர இப்பொழுது இவரின் பெயரை பயன்படுத்தி பெண்களிடம் சீட்டிங் செய்துள்ளது அம்பலமாகி இருக்க இதைக் கேள்விப்பட்ட அருண்விஜய் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மீண்டும் இணைந்து
தடம், மாபியா என தொடர்ந்து ஆக்சன் திரைப்படங்களில் நடித்து பட்டையை கிளப்பி வரும் நடிகர் அருண் விஜய் திரை வாழ்க்கைக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த குற்றம் 23 திரைப்படத்தை இயக்கிய அறிவழகன் இயக்கத்தில் இப்பொழுது மீண்டும் இணைந்து நடித்து வர அதில் ரெஜினா கெஸன்ட்ரா ஜோடியாக நடிக்கிறார்.

சூர்யா தயாரிக்கும்
கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் மிகவும் கவனம் செலுத்தி வரும் அருண் விஜய்யின் சமீபத்திய திரைப்படங்கள் அனைத்தும் தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டே வர இப்பொழுது இவரது மகன் சூர்யா தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் அறிமுகம் ஆகிறார்.

பெண்களிடம் சீட்டிங்
எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வரும் அருண் விஜய்க்கு நீண்ட நாட்களாக வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டிருந்த வா டீல் திரைப்படம் இப்பொழுது ஓடிடியில் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் தொடர் தோல்விகளுக்கு பின்பு இப்பொழுது வளர்ந்து வரும் நடிகராக மிரட்டி வரும் அருண் விஜய் பெயரில் இப்பொழுது பெண்களிடம் சீட்டிங் நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடுமையான நடவடிக்கை
சினிமாவில் வாய்ப்புக்காக தேடிக் கொண்டிருக்கும் இளம் நடிகைகளை குறிவைத்து சிலர் தவறான தகவலில் பிரபல நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க கதாநாயகி தேவை என போஸ்டர்களை வெளியிட்டு சீட்டிங் செய்து வருவது வழக்கமான ஒன்றாக இருக்கும் நிலையில் இப்பொழுது அருண் விஜய் நடிக்கும் புதிய படத்திற்கு கதாநாயகி தேவை என போஸ்டர்கள் சமூகவலைத்தளத்தில் வலம் வர அதைப்பார்த்து அதிர்ந்துபோன அருண் விஜய் ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதள பக்கங்களில் இந்த ஆடிசன் போஸ்ட் இருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை இது போன்ற பொய்யான நபர்களிடமிருந்து பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். என் பெயரை பயன்படுத்தி இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.