»   »  சூர்யா, விஷால், தனுஷ் வரிசையில் இணைந்த அருண் விஜய்

சூர்யா, விஷால், தனுஷ் வரிசையில் இணைந்த அருண் விஜய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தயாரிப்பாளராக மாறியதன் மூலம் நடிகர்கள் விஷால், சூர்யா, தனுஷ் வரிசையில் இணைந்திருக்கிறார் நடிகர் அருண் விஜய்.

என்னை அறிந்தால் படத்தில் சிக்ஸ் பேக் வைத்த வில்லனாக வந்து மிரட்டிய அருண் விஜய்க்கு, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.


Arun Vijay began own Production House

தற்போது ஆறாது சினம் அறிவழகன் இயக்கத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். மேலும் இப்படம் மிகவும் பிடித்துப் போனதில் புதிதாக தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்திருக்கிறார் அருண் விஜய்.


'ஐஸ்-இன் சினிமாஸ் எண்டெர்யின்மெண்ட்' இதுதான் அருண் விஜய் ஆரம்பித்திருக்கும் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர்.


ஈரம், வல்லினம் வரிசையில் இன்று வெளியான ஆறாது சினம் படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதனால் ஒரு இயக்குநராக பூரித்துப் போயிருக்கிறார் அறிவழகன்.


அறிவழகனின் மகிழ்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் வண்ணம், தனது அடுத்த பட கால்ஷீட்டை கொடுத்து படத்தைத் தயாரிக்கவும் முன்வந்திருக்கிறார் அருண்விஜய்.


சூர்யா, விஷால், தனுஷ், அதர்வா என்று நடிகர்கள், தயாரிப்பாளர்களாக மாறிய வரிசையில் அருண் விஜய்யும் தற்போது இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Arun Vijay Starts New Production House. His Production Company Name is 'Ice-In Cinemas Entertainment'.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil