விஜயகுமார் இறந்துவிட்டதாக தீயாகப் பரவிய வதந்தி... பதறிய அருண் விஜய்... அவசரமாக கொடுத்த விளக்கம்!

சென்னை: தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகுமார்.
எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களுடன் நடித்துள்ள விஜயகுமாரின் மகன் அருண் விஜய்யும் நடிகராக கலக்கி வருகிறார்.

இந்நிலையில், நடிகர் விஜயகுமாரின் உடல்நிலை குறித்து செய்திகள் வெளியாகி வந்தன.

அதனையடுத்து விஜயகுமாரின் ஹெல்த் அப்டேட் பற்றி ட்வீட் செய்துள்ளார் அவரது மகனான நடிகர் அருண் விஜய்.

மூன்று தலைமுறை நடிகர் விஜயகுமார்

மூன்று தலைமுறை நடிகர் விஜயகுமார்

1961ம் ஆண்டில் வெளியான ஸ்ரீ வள்ளி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் விஜயகுமார். எம்ஜிஆர், சிவாஜி ஆகியோருடன் கறுப்பு வெள்ளை சினிமாவில் கொடிகட்டி பறந்த விஜயகுமார், அதன் பின்னர் 80 - 90களில் ரஜினி, கமல் ஆகியோருடன் கைகோர்த்தார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய நண்பராகவும் வலம் வந்த விஜயகுமார், மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்த பெருமைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திடீரென தீயாகப் பரவிய வதந்தி

திடீரென தீயாகப் பரவிய வதந்தி

விஜயகுமார் நடிப்பில் அக்னி நட்சத்திரம், சேரன் பாண்டியன், கிழக்குச் சீமையிலே, நாட்டாமை, நட்புக்காக போன்ற படங்களைக் கூறலாம். சமீபத்தில் கூட மகன் அருண் விஜய், அவரது மகன் அர்னவ் விஜய் ஆகியோருடன் இணைந்து 'ஓ மை டாக்' என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், நடிகர் விஜயகுமார் உடல்நல குறைவால் உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த தகவல் திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அருண் விஜய் விளக்கம்

அருண் விஜய் விளக்கம்

அதன்பின்னர் விஜயகுமார் உயிரிழந்துவிட்டதாக வெளியான செய்தி வதந்தி என்றும், அது உண்மையில்லை எனவும் சொல்லப்பட்டது. இதனால் குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு விஜயகுமாரின் மகன் அருண் விஜய் விளக்கம் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் "எனது நண்பர்கள், குடும்பத்தினர் ரசிகர்கள் அனைவருக்கும்... அப்பா வீட்டில் ஆரோக்கியமாக இருக்கிறார். வதந்திகளை நம்ப வேண்டாம்! உங்கள் அக்கறைக்கும் அன்புக்கும் நன்றி!" எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் விஜயகுமார் உயிரிழந்துவிட்டதாக வெளியான செய்திகள் உண்மையில்லை என தெரியவந்துள்ளது.

வதந்திக்கு காரணம் என்ன?

வதந்திக்கு காரணம் என்ன?

நடிகர் விஜயகுமாருக்கு முத்துக்கன்னு, மஞ்சுளா என இரு மனைவிகள் உள்ளனர். கவிதா, அருண் விஜய் ஆகியோர் முதல் தாரமான முத்துக்கன்னுவிற்கும், வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி மூவரும் இரண்டாம் தாரமான மஞ்சுளாவிற்கும் பிறந்தவர்கள். இவர்களில் எல்லோரும் செட்டில் ஆகிவிட்டாலும் வனிதா மட்டுமே அடிக்கடி ட்ரோல்களில் சிக்கி வருகிறார். வனிதா தேவையில்லாத சர்ச்சைகளில் சிக்குவதால், அவருடன் விஜயகுமார் தொடர்பில் இல்லாமலேயே இருக்கிறார். இந்நிலையில், தற்போது அவர் உயிரிழந்துவிட்டதாக பரவிய வதந்திக்கான காரணங்களும் முழுமையாக தெரியவில்லையாம். இருந்தாலும் விஜயகுமார் ஆரோக்கியமாக இருப்பதே நல்ல விசயம் தான் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X