»   »  அருண் விஜய் நடிக்கும் ராஜேஷ்குமாரின் க்ரைம் த்ரில்லர் குற்றம் 23!

அருண் விஜய் நடிக்கும் ராஜேஷ்குமாரின் க்ரைம் த்ரில்லர் குற்றம் 23!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அருண் விஜய்யின் அடுத்த படத்துக்கு 'குற்றம் 23' என்று பெயர் சூட்டியிருக்கின்றனர்.

'ஆறாது சினம்' படத்தைத் தொடர்ந்து அருண் விஜய்யை வைத்து தன்னுடைய அடுத்த படத்தைத் தொடங்கியிருக்கிறார் இயக்குநர் அறிவழகன்.

இந்தப் படத்தின் திரைக்கதை எழுத்தாளர் ராஜேஷ் குமார் எழுதிய க்ரைம் நாவலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Arun Vijay Next Film Title Kuttram 23

விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இப்படத்தை, தன்னுடைய 'ஐஸ்-இன் சினிமாஸ் எண்டெர்யின்மெண்ட்' மூலம் அருண் விஜய் சொந்தமாக தயாரிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்திற்கு 'குற்றம் 23' என்று படக்குழு பெயர் சூட்டியிருக்கிறது.

இப்படத்தில் அருண் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இதுகுறித்து அருண் விஜய், '' இது என்னுடைய 23 வது படம். இப்படத்தில் நான் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறேன். எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் கதை இது. படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. இப்படம் மெடிக்கல் பின்னணியிலான கிரைம் திரில்லர் என்பதால் இந்தத் தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று, அறிவழகன் இத் தலைப்பை தேர்வு செய்தார்.

Arun Vijay Next Film Title Kuttram 23

சென்னை மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி வருகிறோம். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை கேரளாவில் படம்பிடிக்கவுள்ளோம். ஜூன் இறுதிக்குள் மொத்த படப்பிடிப்பும் முடிவுக்கு வந்துவிடும். இந்த மாத இறுதியில் 'குற்றம் 23' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும்'' என்று கூறியிருக்கிறார். இப்படம் அருண் விஜய்யின் 23 வது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Arun Vijay Next Film Titled by Kuttram 23.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil