பார்டர்... ரிலீஸ் தேதியில் மாற்றமா?... தீயாய் பரவிய தகவலால் ரசிகர்கள் குழப்பம்!
சென்னை : பார்டர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுவதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது-
குற்றம் 23 படத்தை அடுத்து அருண் விஜய்யும், இயக்குனர் அறிவழகனும் மீண்டும் இணைந்து பணியாற்றியுள்ள படம் பார்டர்.
இப்படத்தில் நடிகைகள் ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்து இருக்கிறார்கள்.

பார்டர்
பார்டர் திரைப்படத்தில் அருண்விஜய் ஒரு ராணுவ வீரராக நடித்துள்ளார். விஜய ராகவேந்திரா தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை சாபு ஜோசப் மேற்கொண்டுள்ளார். பார்டர் திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

ரிலீஸ் தேதியில் மாற்றமா?
பார்டர் திரைப்படம் நவம்பர் மாதம் 19-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் , ரசிகர்கள் மகிழ்ச்சியில் அடைந்தனர். ஆனால், பார்டர் திரைப்படத்தின் ரிலீசை ஒத்திவைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.

மழை காரணமாக
சென்னையில் கனமழை செய்து வருவதால், திரையரங்குகளுக்கு பார்வையாளர்கள் வருவது குறைந்துள்ளதாகவும், மேலும் படத்திற்கான ப்ரோமோஷன பணிகளும் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், பார்டர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும், படத்தை மேலும், சில நாட்களுக்கு தள்ளிவைக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.

புதிய டிரைலர்
இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும், புதிய வெளியீட்டு தேதி குறித்து விரைவில் ஒரு போஸ்டர் வெளியாகும் என்றும் தெரிகிறது. மேலும், திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க பட வெளியீட்டு தேதிக்கு முன்னதாக புதிய டிரெய்லரை வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

பல படங்களில்
அருண் விஜய் தற்போது பார்டர்,அக்னி சிறகுகள், யானை, வா டீல், பாக்ஸர், சினம் உட்பட பல படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இதில், வா டீல் திரைப்படம் தீபாவளி அன்று திரையரங்கில் வெளியானது.


Click it and Unblock the Notifications











