Don't Miss!
- News
புதிய டிவி சேனலை தொடங்கும் பாஜக! தமிழ்நாட்டிற்கு வரும் "ஜனம்" டிவி.. பாஜக போடும் பிளான் என்ன
- Lifestyle
சனி உருவாக்கும் சச ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு இனி நிறைய லாபம் கிடைக்கும்..
- Automobiles
மாருதி கார் மட்டும்தான் மைலேஜ் தருமா? களத்தில் இறங்கிய டாடா! கூடவே பாதுகாப்பாகவும் இருக்க போகுது!
- Sports
"நாங்க எதிர்பார்த்ததை விட முன்னேறிட்டாங்க".. நியூசிலாந்துடனான வெற்றி.. ரோகித் சர்மா புகழாரம்!
- Finance
அன்றே கணித்தார் எலான் மஸ்க்.. புலம்பி தள்ளும் பெரிய தலைகள்..!
- Technology
இந்திய அரசு போட்ட புது உத்தரவு.! செய்யவே மாட்டோம்னு சொன்ன Jio, Airtel, Vi.! என்னாச்சு தெரியுமா?
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
ஓடிடியில் அறிமுகமாகும் அருண்விஜய்.. ஏவிஎம்மின் தமிழ்ராக்கர்ஸ் டீசர் ரிலீஸ் எப்படி இருக்கு?
சென்னை: இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண்விஜய் நடித்துள்ள யானை படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி தியேட்டரில் வசூலை வாரி வருகிறது.
இந்நிலையில், மீண்டும் தயாரிப்பில் ஆர்வம் காட்டத் தொடங்கி உள்ள ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி உள்ள தமிழ்ராக்கர்ஸ் வெப்சீரிஸின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.
இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த வெப்சீரிஸ் மூலம் ஓடிடியில் அறிமுகமாகிறார் அருண் விஜய்.
மீண்டும்
இணையும்
பாகுபலி-தேவசேனா
ஜோடி..
அடடா
செம
கெமிஸ்டிரியாச்சே..
குஷியில்
ரசிகர்கள்
!

ஓவர்டேக் செய்யும் ஓடிடி
ஒரு பக்கம் தியேட்டர்களில் புதிய படங்கள் வெளியானாலும், ரசிகர்கள் பெரிய நடிகர்களின் படங்களை தவிர மற்ற நடிகர்களின் படங்களை பார்க்க ஆர்வம் செலுத்துவதில்லை. அந்த கேப்பை பயன்படுத்திக் கொண்டு சிறு பட்ஜெட் படங்களுக்கும், வெப்சீரிஸ்களுக்கும் வாழ்வளித்து தியேட்டர்களை ஓவர்டேக் செய்து வருகிறது ஓடிடி. சமீபத்தில் வெளியான சுழல், ஃபிஙர்டிப் வெப்சீரிஸை தொடர்ந்து தமிழ்ராக்கர்ஸ் வெப்சீரிஸும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

ஓடிடியில் அறிமுகமாகும் அருண்விஜய்
முன்னணி நடிகைகள் ஓடிடியில் வெளியாகும் வெப்சீரிஸ்களில் நடித்து வரும் நிலையில், நடிகர்களும் தற்போது ஓடிடி பக்கம் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். பிரசன்னா, அசோக் செல்வன் உள்ளிட்ட நடிகர்கள் ஓடிடி பக்கம் வந்த நிலையில், தற்போது அருண்விஜய்யும் ஓடிடியில் தமிழ்ராக்கர்ஸ் வெப்சீரிஸ் மூலம் அறிமுகமாக உள்ளார். தற்போது வெளியாகி உள்ள டீசரில் திருட்டு விசிடியை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக அருண்விஜய் நடித்துள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது.

வசூல் குவிக்கும் யானை
இந்த வாரம் தியேட்டரில் ராக்கெட்ரி, டி ப்ளாக் மற்றும் யானை என மூன்று புதிய படங்கள் வெளியாகின. அதில், அதிகப்படியான மக்களை தியேட்டருக்கு கொண்டு வந்த பெருமையை அருண்விஜய்யின் யானை படம் செய்துள்ளது. சாமி ஸ்கொயர் படு தோல்வியை சந்தித்த நிலையில், அருண்விஜய்யின் யானை மூலம் இயக்குநர் ஹரியும் கம்பேக் கொடுத்துள்ளார். படத்தின் கிளைமேக்ஸை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், அடுத்ததாக சோனி லைவ்வில் வெளியாக உள்ள தமிழ்ராக்கர்ஸ் வெப் தொடரில் அருண் விஜய் அசத்த போகிறார்.
|
ஏவிஎம் ரிட்டர்ன்ஸ்
பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் இந்த வெப்சீரிஸை தயாரித்துள்ளது. சோனி லைவ்வில் விரைவில் வெளியாக போகிறது என்கிற அறிவிப்புடன் டீசரை வெளியிட்டுள்ளது. அயன் படத்தில் பார்த்த காட்சிகளை போல சிங்கதுரை எனும் படத்தின் திருட்டு விசிடியை தமிழ்ராக்கர்ஸ் தங்கள் வெப்சைட்டில் திருட்டுத்தனமாக போட அதனை கண்டறிய்ம் அதிகாரியாக அருண்விஜய் நடித்துள்ளார். வாணி போஜன் ஹீரோயினாக நடித்துள்ளார்.