செல்ல நாயுடன் ஜாலி பயற்சி...லாக்டவுனிலும் அருண்விஜய் பிஸி

சென்னை : நாய்கள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர் அருண் விஜய் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தனது செல்ல பிராணிகளுடன் கொஞ்சி விளையாடும் ஃபோட்டோக்களை அடிக்கடி சமூக வலைதளஙகளிலும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் கொரோனா லாக்டவுன் அமலில் இருக்கும் இந்த சமயத்தில் தனது குடும்பத்தினர் மற்றும் செல்ல பிராணிகளுடன் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார் அருண்விஜய். ருத்ரா, கிரேட் டேனி, சாக்கி, ஷிக் துஷ் காக்கர் போன்ற நாய்களை வளர்த்து வருகிறார் அருண் விஜய்.

மொட்டை மாடியில் பயிற்சி

மொட்டை மாடியில் பயிற்சி

இந்நிலையில் மொட்டை மாடியில் தனது செல்ல நாயான ருத்ராவிற்கு அருண் விஜய் மற்றும் அவரது மகன் அருணவ் ஆகியோர் பயிற்சி அளிக்கும் வீடியோவை அருண் விஜய் பகிர்ந்துள்ளார். மிகவும் ஜாலியாக ருத்ராவுடன் தந்தை-மகன் இரவரும் விளையாடும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

என் வாழ்வில் ருத்ரா வந்த கதை

என் வாழ்வில் ருத்ரா வந்த கதை

முன்பு அருண் விஜய் அளித்த பேட்டி ஒன்றில், மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் படத்தில் நடித்து முடித்த பிறகு ருத்ராவை தான் வளர்க்க துவங்கியதாக கூறி இருந்தார். மேலும் அவர் கூறுகையில், அந்த படத்தில் எனது அறிமுக காட்சியே இந்த பெரிய நாயுடன் இருப்பது தான்.

சீக்கிரம் கவர்ந்த ருத்ரா

சீக்கிரம் கவர்ந்த ருத்ரா

எனக்கு அப்போது முதல் இந்த நாயை மிகவும் பிடித்து விட்டது. எனக்கு எப்போதும் சிப்பிபாறை அல்லது கன்னி போன்ற தென்னிந்திய வகை நாய்களைபிடிக்கும். அதனால் ருத்ரா என்னை சீக்கிரம் கவர்ந்து விட்டது. என்னை இழுத்து கீழே அமர வைத்து, என்னை பார்த்து செல்லமாக சண்டையிட்டு விளையாடும் என்றார்.

 லைக்குகளை அள்ளும் வீடியோ

லைக்குகளை அள்ளும் வீடியோ

அருண்விஜய் தற்போது வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார். அக்னி சிறகுகள், பாக்சர், சினம், பார்டர் போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இருந்தாலும் நாய்களுடன் நேரம் செலவிட அருண்விஜய் தவறுவதே இல்லை. தற்போது அருண் விஜய் பகிர்ந்துள்ள வீடியோவை இதுவரை ஏறக்குறைய 4 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X