யானை ரிலீஸ் தள்ளிப்போக இது தான் காரணம்....புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
சென்னை : அருண் விஜய் நடித்த யானை படம் தள்ளி போவதாக கூறப்பட்டு வந்த நிலையில், அதை உறுதி செய்த தயாரிப்பு நிறுவனம், புதிய ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளது. யானை படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டதற்கான காரணமும் வெளியாகி உள்ளதால், யானை டீமுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Recommended Video
டைரக்டர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள படம் யானை. ஆக்ஷன், சென்டிமென்ட், கிராமத்து பொழுதுபோக்கு படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடித்துள்ளார். Drumstick Productions இந்த படத்தை தயாரித்துள்ளது.
பிரகாஷ் ராஜ், ராதிகா சரத்குமார், யோகிபாபு, அம்மு அபிராமி, ராஜேஷ், தலைவாசல் விஜய், போஸ் வெங்கட், குக் வித் கோமாளி ராஜேந்திரன் ராஜு, ஐஸ்வர்யா, ஜெயபாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கங்கை அமரன் முக்கிய ரோலில் நடித்துள்ள இந்த படத்தின் ஷுட்டிங் ராமேஸ்வரம், பழநி, தூத்துக்குடி, காரைக்குடி, நாகூர் உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டது.

தள்ளி போகிறது யானை ரிலீஸ்
யானை படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து ஜுன் 17 ம் தேதி யானை படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. தியேட்டர்களில் மிகப் பெரிய அளவில் ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி போவதாக சமீபத்தில் தகவல் பரவியது.

கமலை சந்தித்த யானை டீம்
இந்நிலையில் இன்று நடிகர் அருண் விஜய், டைரக்டர் ஹரி ஆகியோர் கமல்ஹாசனை மரியாதை நிமிடத்தமாக நேரில் சந்தித்தனர். இந்த போட்டோவை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்த அருண்விஜய், விக்ரம் படத்திற்கு மரியாதை அளிப்பதற்காக யானை படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கிறோம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். விக்ரம் படம் வெற்றி அடைந்ததற்காக கமலை சந்தித்து யானை படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
இதைத் தொடர்ந்து சிறிது நேரத்திலேயே Drumstick Productions தனது ட்விட்டர் பக்கத்தில், விக்ரம் படத்திற்கு மரியாதை அளிப்பதற்காக எங்களின் படத்தின் ரிலீஸ் தேதியை ஜுலை 1 ம் தேதிக்கு தள்ளி வைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதோடு, விக்ரம் படத்திற்கு மரியாதை செலுத்தவே தங்களின் யானை பட ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக ஓப்பனாக தெரிவித்ததுடன், பல சாதனைகளை முறியடித்து வெற்றி நடை போட்டு வரும் விக்ரம் படக்குழுவிற்கு எங்களின் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளது.

யானை தள்ளி போக இதுதான் காரணம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படம் தமிழகத்தில் மட்டும் கிட்டதட்ட 800 முதல் 900 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. பெரும்பாலான தியேட்டர்களில் தற்போது வரை ஹவுஸ்ஃபுல் போர்டு மாட்டப்பட்டுள்ளது. வசூலை குவித்து பாக்ஸ் ஆபீசிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த சமயத்தில் யானை படத்தை ரிலீஸ் செய்வது சரியாக இருக்காது. தியேட்டர்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். அப்படியே கிடைத்தாலும் அது படத்தின் வசூலை பாதிக்கும் என படக்குழு கருதுகிறதாம். விக்ரமுடன் போட்டி போட வேண்டாம் என நினைத்து தான் யானை பின்வாங்கி உள்ளதாம்.


Click it and Unblock the Notifications











