ஒதுங்கி போனா உரசுவீக...பதுங்கி போனா பாய்வீக...யானை டிரைலர் எப்படி இருக்கு?

சென்னை : டைரக்டர் ஹரி இயக்கத்தில் அருண்விஜய் நடித்த யானை படத்தின் டிரைலர் செம மாஸாக வெளியிடப்பட்டுள்ளது. ஆக்ஷன், சென்டிமென்ட் கலந்த இந்த டிரைலர் பற்றி ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள், டிரைலர் எப்படி இருக்கு என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

டைரக்டர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள படம் யானை. பிரியா பவானிசங்கர், ராதிகா, சமுத்திரக்கனி, ராமச்சந்திர ராஜு, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் ஜுன் 17 ம் தேதி ரிலீசாக உள்ளது.

யானை டிரைலர்

யானை டிரைலர்

யானை படத்திற்கான ப்ரொமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு நிமிடங்கள் 20 விநாடிகள் கொண்ட இந்த டிரைலர் சென்டிமென்ட் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் கலந்ததாக அமைக்கப்பட்டுள்ளது. மிக உருக்கமான பாடல் வரிகளுடன், ஜி.வி.பிரகாஷின் மிரட்டலான இசையில் இது உருவாகி உள்ளது.

டிரைலர் எப்படி இருக்கு

டிரைலர் எப்படி இருக்கு

டிரைலரின் முதல் பாதி சென்டிமென்ட் நிறைந்ததாகவும், இரண்டாவது பாதி ஆக்ஷன் நிறைந்ததாகவும் உள்ளது. சென்டிமென்ட் பாதியில் படத்தில் நடித்துள்ள அத்தனை நடிகர்களின் இன்ட்ரோ காணப்படுகிறது. கேஜிஎஃப் 2 படத்தில் வில்லனாக கருடன் கேரக்டரில் நடித்த ராமச்சந்திர ராஜு தான் இந்த படத்திலும் வில்லன். அவர் வரும் இடத்தில் இருந்து ஆக்ஷன் தெறிக்க விட்டுள்ளனர். கடைசியாக அருண் விஜய். தூத்துக்குடி தமிழில் பஞ்சு டயலாக் பேசி முடித்துள்ளார்.

ரசிகர்கள் கருத்து என்ன

ரசிகர்கள் கருத்து என்ன

யானை டிரைலரை பார்க்கும் போது எங்கேயோ பார்த்த ஞாபகம் தான் அனைவரின் மனதிலும் ஏற்படுகிறது என்பதே பெரும்பாலான ரசிகர்கள் கூறும் கருத்தாக உள்ளது. அதிலும் ராதிகா வரும் சீன்களில் பூஜை பார்ட் 2 பார்ப்பது போன்ற உணர்வை யாராலும் தவிர்க்க முடியாது. ஹரி இதுவரை எடுத்த அத்தனை படங்களின் மிக்சிங் தான் யானை படமா என பலரும் கேட்டு வருகின்றனர். ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தையே இந்த டிரைலர் பெற்றுள்ளது.

செம மாஸ் டயலாக்

செம மாஸ் டயலாக்

டிரைலரின் கடைசியில் தூத்துக்குடி தமிழில் அருண் விஜய் பேசும், ஒதுங்கி போனா உரசுவீக...பதுங்கி போனா பாய்வீக...சமாதானம் பேச வந்தாலும் அரிவாளில் தானடா வெள்ளக்கொடியை எடுத்துட்டு வாரீக என்ற டயலாக் செம மாஸா இருக்கு. வழக்கமாக பேண்ட் ஷர்ட்டில் அருண் விஜய்யை பார்த்து பழக்கப்பட்ட ரசிகர்களுக்கு அவரை முழுக்க முழுக்க வேஷ்டி சட்டையில் பார்ப்பது புது அனுபவத்தை கொடுக்க உள்ளது. ராமச்சந்திர ராஜுவும் செமயான வில்லத்தனம் காட்டி உள்ளார் என்பது தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X