»   »  'பிரேமம்' அல்போன்ஸ் புத்திரனின் அடுத்த நாயகன் அருண் விஜய்?

'பிரேமம்' அல்போன்ஸ் புத்திரனின் அடுத்த நாயகன் அருண் விஜய்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நேரம், பிரேமம் போன்ற வெற்றிப்படங்களை அளித்த அல்போன்ஸ் புத்திரனின் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் அருண் விஜய் தற்போது தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் நடித்து வருகிறார்.

Arun Vijay Team Up with Alphonse Putharen?

இந்நிலையில் நேரம் என்ற சூப்பர் ஹிட் படத்தையும், பிரேமம் என்ற பிளாக்பஸ்டரையும் கொடுத்த இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனின் அடுத்த படத்தில் அருண் விஜய் நாயகனாக நடிக்கவிருப்பதாக கூறுகின்றனர்.

அல்போன்ஸ் புத்திரன் தமிழில் எடுக்கவிருக்கும் இந்தப் படத்தில் அருண் விஜய் தான் நாயகனாம். மேலும் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி அல்லது மோகன்லால் இருவரில் யாராவது ஒருவரை இந்தப் படத்தில் நடிக்க வைக்கவும் பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றனவாம்.

தமிழ்நாட்டில் 200 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய பிரேமம் படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக் உரிமைகள் ஒரு பெரிய தொகைக்கு விலை போயிருக்கிறது.

இதனால் தமிழ்நாட்டில் நேரடியாக தனது அடுத்த படத்தை எடுக்கும் முடிவிற்கு வந்திருக்கிறார் அல்போன்ஸ் புத்திரன். என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்யின் நடிப்பு அல்போன்ஸை மிகவும் கவர்ந்து விட்டது தான் இந்த முடிவிற்கு காரணமாம்.

ஆரம்ப காலத்தில் விஜய் சேதுபதி,பாபி சிம்ஹாவை வைத்து ஒன்றுக்கும் மேற்பட்ட குறும்படங்களை தமிழில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அருண் விஜய் - அல்போன்ஸ் புத்திரன் கூட்டணி இணையுமா? பார்க்கலாம்.

English summary
Arun Vijay's Next Director Alphonse Putharen? Sources Said Arun Vijay Next Team Up with Premam Director Alphonse Putharen.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil