Just In
- 38 min ago
அயலான் படத்தின் அசத்தல் அப்டேட்.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு.. தெறிக்கும் டிவிட்டர்! #Ayalaan
- 1 hr ago
ரசிகர்கள் கேட்ட அந்த கேள்வி.. கவர்ச்சி போட்டோக்களை அதிரடியாய் டெலிட் செய்த ஷிவானி நாராயணன்!
- 17 hrs ago
அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்!
- 18 hrs ago
சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி!
Don't Miss!
- Sports
உடலில் செலுத்தப்பட்ட 2 ஊசிகள்.. கஷ்டப்பட்டு போராடிய பண்ட்.. வெளியான ரகசியம்.. என்ன நடந்தது?
- News
விரைவில் எங்கும் வாக்களிக்கும் திட்டம்... அசத்தும் அரோரா
- Automobiles
இந்த ஆண்டு தீபாவளி ரிலீஸ் பட்டியலில் சிட்ரோன் பட்ஜெட் எஸ்யூவி கார்... சொனெட் போட்டியாளர்!
- Finance
வாரத்தின் முதல் நாளே தடுமாறும் இந்திய சந்தைகள்.. என்ன காரணம்..!
- Lifestyle
நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க காலை வேளையில் செய்வதற்கு ஏற்ற எளிமையான 5 உடற்பயிற்சிகள்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அருணாச்சலம் படத்தில் ரஜினியுடன் நடித்த குரங்கு மரணம்!
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து மிகப் பெரிய வெற்றிப் பெற்ற படம் அருணாசலம்.. அதில் ஒரு காட்சி.
பஸ்சில் ஊருக்குப் புறப்படத் தயாராக இருப்பார் ரஜினி.
அப்போது அங்கு வரும் ஒரு குரங்கு அவரது கழுத்தில் கிடந்த ருத்ராட்சையைப் பறித்துக் கொண்டு ஓடும். இதையடுத்து ரஜினியும் அதை பின் தொடர்ந்து செல்வார். அப்போதுதான் அவரது பின்னணி தெரியவரும்.

அதுவே அருணாச்சலத்தின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தும்.
அந்த காட்சியில் நடித்த குரங்கின் பெயர் ராமு. சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த நேரு என்பவரால் வளர்க்கப்பட்ட இந்த குரங்கு, சில படங்களில் நடித்துள்ளது.
பின்னர் நேரு தன் குடும்பத்துடன் சென்னைக்கு சென்று விட்டார். போகும்போது, இந்தக் குரங்கை சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் ஒப்படைத்தார். கடந்த சில ஆண்டுகளாக இது வனத்துறையினரின் பராமரிப்பில் வளர்ந்து வந்தது.
ராமு குரங்குக்கு 33 வயதான நிலையில் மூப்பின் காரணமாக நேற்று மரணம் அடைந்தது. சேலம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்ட ராமு, பரிசோதனை முடிந்ததும் அடக்கம் செய்யப்பட்டது.
பொதுவாக குரங்குகள் 25 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை தான் உயிர் வாழும். ஆனால் இந்த குரங்கு மட்டும் 33 ஆண்டுகள் உயிர் வாழ்ந்துள்ளது.