»   »  பாராட்டுகளை அள்ளிய 'அருவி' டீசர் வெளியீடு!

பாராட்டுகளை அள்ளிய 'அருவி' டீசர் வெளியீடு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : அறிமுக இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கிய 'அருவி' படத்தின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வரும் நவம்பர் 16-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலுமகேந்திரா, கே.எஸ்.ரவிகுமார் ஆகியோரிடம் துணை இயக்குனராகப் பணியாற்றிய அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கிய படம் 'அருவி'. இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தயாரித்துள்ளனர்.

Aruvi teaser released oficially

இந்தப் படம் சமூக அரசியல் படமாக உருவாகியுள்ளதாம். இத்திரைப்படத்தின் பிரத்யேகக் காட்சியைக் கண்டுகளித்த சமூக ஆர்வலர்கள், ஊடகத்துறையினர், திரைத்துறையினர் என அனைவரும் பாராட்டி வருகிறார்கள். பல திரைவிழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளை அள்ளியது 'அருவி'.

சமீபத்தில் படத்தைப் பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் 'அருவி' படத்தையும், அறிமுக இயக்குநர் அருண்பிரபுவையும், படத்தில் தன்னுடைய நடிப்புத் திறமையால் அனைவரையும் கவர்ந்த நாயகி அதிதி பாலனையும் ட்விட்டரில் பாராட்டி இருந்தார்.

அருவி எனும் பெண்ணின் வாழ்க்கையில் நடக்கக்கூடிய சுவாரஸ்யமான விஷயங்களின் தொகுப்பு தான் இந்த படம் எனக் கூறப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் ரிலீஸாகவிருக்கும் இந்த படத்த்துக்கு பிந்து மேனன், வேதாந்த் பரத்வாஜ் இசை அமைத்திருக்கிறார்கள்.

English summary
'Aruvi' teaser is out now officially. 'Aruvi' film was directed by Arunprabhu Purushothaman. The film 'Aruvi' has been screened in numerous film festivals and got praised.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X