»   »  ஸ்டைலிஷ் வில்லனைத் தொடர்ந்து 'முனிவராக' மாறும் அரவிந்த் சாமி?

ஸ்டைலிஷ் வில்லனைத் தொடர்ந்து 'முனிவராக' மாறும் அரவிந்த் சாமி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வளர்ந்து வரும் போகன் படத்தில், அரவிந்த் சாமி முனிவராக நடிக்கப் போகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

'ரோமியோ ஜூலியட்' புகழ் லட்சுமணன் இயக்கத்தில், ஜெயம் ரவி, ஹன்சிகா, அரவிந்த் சாமி, அக்ஷரா கவுடா மற்றும் பலர் நடித்து வரும் படம் போகன்.

Arvind Swami to Play Sage in Bogan

இந்நிலையில் 'தனி ஒருவன்' படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக ரசிகர்களை மிரட்டிய அரவிந்த் சாமி, இதில் முனிவர் வேடத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நீண்ட வருடங்களுக்குப்பின் நடிக்க வந்த அரவிந்த் சாமி 'தனி ஒருவன்' படத்தில் தன்னுடைய அழுத்தமான நடிப்பால் முத்திரை பதித்திருந்தார். சொல்லப் போனால் அப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு அரவிந்த் சாமியே முக்கியக் காரணமாகத் திகழ்ந்தார்.

இதனால் அரவிந்த் சாமி- ஜெயம் ரவி மீண்டும் இணைந்திருக்கும் போகன் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

சமீபத்திய தகவல்களின் படி இப்படத்தில் அரவிந்த் சாமி முனிவர் வேடத்தில் நடிக்கப் போவதாகக் கூறப்படுகிறது.மேலும் அரவிந்த் சாமி முனிவராக நடிக்கும் காட்சிகளை அந்தமான் பகுதிகளில் படம்பிடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

இதற்காக ஒட்டுமொத்த படக்குழுவினரும் விரைவில் அந்தமான் பயணிக்கப் போகிறார்களாம்.முன்னதாக இப்படத்தில் அரவிந்த் சாமி இளவரசன் வேடத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஸ்டைலிஷ் வில்லன் முனிவராக முத்திரை பதிப்பாரா?

English summary
Sources said Arvind Swami to play a Sage in Jayam Ravi's Next Movie Bogan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil