»   »  'அழகு' அரவிந்தசாமி... வில்லத்தனத்திலும் "பிரில்லியன்ட்"!

'அழகு' அரவிந்தசாமி... வில்லத்தனத்திலும் "பிரில்லியன்ட்"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வில்லன் என்றாலே பயங்கர உருவம், மிரட்டும் குரல், நயவஞ்சக சிரிப்பு என்ற டிரேட் மார்க்கை உடைத்து சமீபகாலமாக தமிழ் சினிமாவில் அழகிய வில்லன்கள் வலம் வருகின்றனர். அதிலும் முன்னாள் ஹீரோக்கள் சிலர் தற்போது அழகிய வில்லன்களாக மறுபிரவேசம் செய்துள்ளனர்.

அனேகன் படத்தில் தனுஷிற்கு வில்லனாக கார்த்திக்கும், என்னை அறிந்தால் படத்தில் அஜீத்திற்கு வில்லனாக அருண் விஜய்யும் நடித்திருந்தனர். தற்போது அந்தப் பட்டியலில் அழகான வில்லனாக சேர்ந்துள்ளார் நடிகர் அரவிந்த்சாமி.


மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி இயக்கத்தில் தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்துள்ளார் அரவிந்த்சாமி.


பெண் ரசிகைகள்...

பெண் ரசிகைகள்...

தளபதி படத்தில் ரஜினிக்கு தம்பியாக கலெக்டராக அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் அரவிந்த்சாமி. அதனைத் தொடர்ந்து ரோஜா, பம்பாய் என ஹீரோவாக நடித்து பெண் ரசிகைகளின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.


அரவிந்த்சாமி மாதிரி மாப்பிள்ளை...

அரவிந்த்சாமி மாதிரி மாப்பிள்ளை...

இன்றும் மாப்பிள்ளை அரவிந்த்சாமி மாதிரி வேண்டும் என சொல்லும் பெண்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். அந்தளவிற்கு தன் அழகால் ரசிகைகள் மனதில் இடம் பிடித்த அரவிந்த் சாமிக்கு அடுத்தடுத்து வெற்றிப் படங்கள் அமையவில்லை.


தனி ஒருவன்...

தனி ஒருவன்...

இதனால் சினிமாவில் இருந்து சற்று விலகிய அரவிந்த்சாமி, மீண்டும் கடல் படம் மூலம் மறுபிரவேசம் செய்தார். இந்நிலையில், ஜெயம் ரவியின் வில்லனாக தனி ஒருவன் படத்தில் நடித்துள்ளார் அரவிந்த்சாமி.


நடிப்பில் அசத்தல்...

நடிப்பில் அசத்தல்...

சித்தார்த் அபிமன்யு என்ற கதாபாத்திரத்தில் தன் சுயநலத்திற்காக சிரித்துக் கொண்டே வில்லத்தனம் செய்யும் வேடத்தில் கலக்கியுள்ளார் அரவிந்த்சாமி. தன் இஷ்டப்படி தன் தந்தையை ஆட்டி வைக்கும் காட்சிகளிலும், கடைசியில் சிரித்துக் கொண்டே உயிரை விடும் காட்சியிலும் நடிப்பில் அசத்துகிறார் அரவிந்த் சாமி.


அழகிய வில்லன்...

அழகிய வில்லன்...

ஹீரோவுடன் கட்டிப் பிடித்து உருண்டு சண்டை போட்டு ரத்தக்களறி ஆக்காமல், சட்டை கசங்காமல் அழகிய வில்லனாகவே வலம் வருகிறார் அரவிந்த்சாமி. ஜெயம் ரவிக்கு இணையாக தனி ஒருவனாக மனதில் இடம் பிடித்துள்ளார் என்றால் மிகையில்லை.


திறமையான நடிப்பு...

திறமையான நடிப்பு...

நாயகனுக்கு இணையாக அரவிந்த்சாமிக்கும் ரொமான்ஸ் காட்சிகள், அழகிய நாயகி என பேலன்ஸ் செய்துள்ளார் இயக்குநர். போனில் பேசிய தன் காரியங்களை சாதிக்கும் கதாபாத்திரத்தில் தனது திறமையான நடிப்பால் வித்தியாசம் காட்டியுள்ளார் அரவிந்த் சாமி.


கோட்டுக்கு எந்தப்பக்கம்...

கோட்டுக்கு எந்தப்பக்கம்...

தனி ஒருவன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அழகிய வில்லன் ஒருவர் கிடைத்துள்ளார். தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்திலேயே நடிக்கப் போகிறாரா இல்லை மீண்டும் ஹீரோவாக நடிப்பாரா என்பதற்கு அர்விந்த் சாமி தான் பதிலளிக்க வேண்டும்.


English summary
Actor Arvind swamy had did a great performance as villain in Thani Oruvan film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil