»   »  போகனால் காக்கிக்கு மாறிய 'தனி ஒருவன்'கள்

போகனால் காக்கிக்கு மாறிய 'தனி ஒருவன்'கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: போகன் படத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி இருவருமே போலீசாக நடித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த தனி ஒருவன் படத்தில் அரவிந்த் சாமியின் நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.


ஜெயம் ரவி-அரவிந்த் சாமி முதன்முறையாக இணைந்த தனி ஒருவன் மிகப்பெரிய வெற்றி பெற்றதால், தற்போது இவர்கள் நடித்து வரும் போகன் படத்திற்கு ரசிகர்கள் 'ஐ ஆம் வெயிட்டிங்' என்று காத்துக் கொண்டுள்ளனர்.


ரோமியோ ஜூலியட்

ரோமியோ ஜூலியட்

ரோமியோ ஜூலியட் புகழ் லட்சுமணன் ஜெயம் ரவி-ஹன்சிகாவை வைத்து போகன் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் மூலம் ஹன்சிகாவுடன் 3 வது முறையாகவும், அரவிந்த் சாமியுடன் 2 வது முறையாகவும் ஜெயம் ரவி சேர்ந்து நடித்து வருகிறார்.


அரவிந்த் சாமி

அரவிந்த் சாமி

இப்படத்தில் ஜெயம் ரவி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்நிலையில் அரவிந்த் சாமியும் போலீசாக நடிப்பது உறுதியாகியுள்ளது. இருவரும் போலீஸ் உடையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில் வழக்கம் போல ஜெயம் ரவி பர்பெக்ட் போலீசாக நிற்கிறார். அதே நேரம் அரவிந்த் சாமி அதற்கு நேர்மாறாக சட்டை பட்டன்களை கழட்டி விட்டு, நேம் பேட்ச் எதுவும் இல்லாமல் காட்சியளிக்கிறார்.


காக்கி

காக்கி

இதன் மூலம் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, அக்ஷரா கவுடா என்று மூவருமே போலீஸ் வேடத்தில் நடிப்பது தற்போது உறுதியாகியுள்ளது.ஹன்சிகா வழக்கம்போல ஜெயம் ரவிக்கு காதலியாக வருகிறாரா? இல்லை வேறு ஏதேனும் வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறாரா? என்பது தெரியவில்லை.


நல்லவன்-கெட்டவன்

நல்லவன்-கெட்டவன்

போகன் முதல் பாதியில் ஜெயம் ரவி நல்லவனாகவும் ,அரவிந்த் சாமி கெட்டவனாகவும் 2 வது பாதியில் இருவருமே அதற்கு நேர்மாறாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிடவுள்ளது.


English summary
Arvind Swamy Plays a Cop Role in his Upcoming movie Bogan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil