»   »  அழகான வில்லன் அர்விந்த் சாமி...

அழகான வில்லன் அர்விந்த் சாமி...

Posted By:
Subscribe to Oneindia Tamil

மாப்பிள்ளைன்னு பார்த்தா அர்விந்த் சாமி மாதிரி பார்க்கணும்... இது 90களில் ரோஜா படம் பார்த்த போதே பெரும்பான்மையான தமிழ் பெண்களின் மனதில் பதிந்து விட்டது. ஆனாலும் அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் படிப்பு,பிசினெஸ் என்று கவனம் செலுத்தியவர் பம்பாய் படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். இது மட்டுமே என் வேலையில்லை என்று உணர்ந்ததாலோ என்னவோ ஆளை விடுங்கப்பா என்று சினிமாவை விட்டே விலகினார் அரவிந்த் சாமி.

அர்விந்த் சாமி சினிமாவில் நடிக்காவிட்டாலும் அவரைப் பற்றிய செய்திகள் மட்டுமே சில வருடங்கள் வந்து கொண்டிருந்தன. விவாகரத்து பற்றிய செய்திகள் வந்த போது நாளிதழ்களில் வந்த அர்விந்த் சாமியின் புகைப்படத்தை பார்த்தவர்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது அதனை முகநூலில் பகிர்ந்து கமெண்ட் பண்ணியவர்கள்தான் அதிகம்


அதைப்பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை அர்விந்த் ஸ்வாமி. கடல் படம் மூலம் மீண்டும் சினிமா உலகிற்கு வந்த அர்விந்த் சாமி தனி ஒருவன் படத்தில் ஸ்டைலிஸ் வில்லனாக அவதாரம் எடுத்திருக்கிறார். டிரெயிலர் பார்க்கும் போதே காக்கிக்சட்டையில் நடித்திருக்கும் ஜெயம் ரவியை விட ஸ்டைலாக துப்பாக்கியைக் கையாளும் அர்விந்த் சாமியைத்தான் அத்தனை பிடித்துப்போகிறது. எப்படி இப்படி என்று கேட்டால் எல்லாம் அப்படித்தான் என்கிறார் அர்விந்த் சாமி. வார இதழ் ஒன்றிர்க்கு அவர் அளித்த பேட்டியில் இருந்து சில துளிகள்...


அழகு பற்றி கவலையில்லை

அழகு பற்றி கவலையில்லை

அழகுன்னு பாராட்டினப்பவும் நான் அதைப் பெருசா எடுத்துக்கலை. விபத்துக்குப் பிறகு என் போட்டோக்களை ஷேர் பண்ணி, 'எப்படி இருந்தவன் எப்படி ஆயிட்டான் பாருய்யா?'னு சொன்னபோதும் அதைப் பத்தி கவலைப்படலை என்கிறார் அதுதான் அர்விந்த் சாமி


என்னிடம் ஏதுமில்லை

என்னிடம் ஏதுமில்லை

அழகை ஒரு காம்ப்ளிமென்டா நான் நினைச்சதே இல்லை. ஏன்னா, அதில் என் உழைப்போ, திறமையோ எதுவும் இல்லையே! எனவே மற்றவர்களின் கமெண்ட் பற்றி கவலைப்படவில்லை.


ஐஸ்வர்யாராயும் நானும்

ஐஸ்வர்யாராயும் நானும்

குண்டான ஐஸ்வர்யா ராய் படத்தையும் பக்கத்துலயே நான் குண்டா இருக்கும்போது எடுத்த படத்தையும் வெச்சு, 'அர்விந்த் சாமி மாதிரி மாப்பிள்ளை வேணும், ஐஸ்வர்யா ராய் மாதிரி பொண்ணு வேணும்னு சொன்னவங்கள்லாம் இப்ப வாங்கடா பார்ப்போம்'னு ஜோக் பண்ணினாங்க. உண்மையிலேயே அந்த கமென்டைப் பார்த்து நான் பயங்கரமா சிரிச்சேன்.


வில்லன்தான் பிடிக்கும்

வில்லன்தான் பிடிக்கும்

நெகட்டிவ் ரோல்தான் எப்பவுமே எனக்கு இஷ்டம். பண்ணினால் ஒரு பவர்ஃபுல் கேரக்டரா இருக்கணும்னு நினைச்சேன். அப்பதான் 'தனி ஒருவன்' வந்துச்சு ஒத்துக்கொண்டேன்.


ஹிந்தியில் நடிக்கிறேன்

ஹிந்தியில் நடிக்கிறேன்

ஹீரோ, வில்லன்னு எந்த வரைமுறையும் வகுத்துக்கலை. நல்ல கேரக்டர்னா பண்ணலாம். ஹிந்தியில 'டியர் டாடி'னு ஒரு படம். அதுல லீட் ரோல் பண்றேன்.


எல்லோருக்கும் பிடிக்கும்

எல்லோருக்கும் பிடிக்கும்

ஹீரோவோ, வில்லனோ நீங்க எப்படி நடிச்சாலும் உங்களை பிடிக்கும் அர்விந்த் சாமி என்கின்றனர் ரசிகக்கண்மணிகள்... அப்போ உங்களுக்கு?


English summary
Arvind Samy’s villainous role is on par with Jayam Ravi’s character. While leading lady Nayanthara does a blink and miss in the teaser, Jayam Ravi impresses as a super fit cop. But it is Arvind Swamy,
Please Wait while comments are loading...