twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எம்.ஜி.ஆராக நடிக்க நான் கஷ்டப்படவில்லை…பெரும் பொறுப்பாக நினைத்து நடித்தேன்..அரவிந்த்சாமி பேச்சு!

    |

    சென்னை : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தலைவி என்ற பெயரில் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார்.

    பிக்பாஸ் 5 ல் நானா ?...அட போங்கப்பா...வதந்திகளை மறுத்த நகுல் பிக்பாஸ் 5 ல் நானா ?...அட போங்கப்பா...வதந்திகளை மறுத்த நகுல்

    இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கணா ரணாவத் நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும், சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    பாகுபலி கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் இப்படத்தின் கதையில் பணிபுரிந்துள்ளார். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன.

    ஒருவருக்கு மட்டுமே சொந்தம்

    ஒருவருக்கு மட்டுமே சொந்தம்

    இப்படத்தின் டிரைலர் மார்ச் 23ந் தேதி வெளியிடப்பட்டது. இவ்விழாவில் பேசிய அரவிந்த் சாமி, மைக்கை பார்க்கும் போதெல்லாம் என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புக்களே என்று சொல்லத் தோன்றுகிறது. ஆனால் , அந்த வார்த்தை ஒரே ஒருவருக்கு மட்டுமே சொந்தமானது என்பதால் வணக்கம் என்று கூறுகிறேன் என்றார்.

    ரசித்து ரசித்து நடித்தேன்

    ரசித்து ரசித்து நடித்தேன்

    பல ஆளுமைகளின் கதாபாத்திரங்கள் நிறைந்த இப்படத்தில் என்னை புரட்சித் தலைவராக நடிக்க வைத்த விஜய்க்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்தாலும், அது நன்றாக வரவேண்டும் என்ற ஆர்வத்துடன் நடிக்க வேண்டும். அப்படி நடிக்கும் போது அது கஷ்டமாக தெரியாது. இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நான் கஷ்டப்படவில்லை. அந்த கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து ரசித்து ரசித்து நடித்தேன். மேலும் சிறு வயதிலிருந்து பிரம்மாண்டமாகப் பார்த்து ரசித்த மனிதரின் கதாபாத்திரம் இது. இதை ஒரு மிகப்பெரிய பொறுப்பாக நினைத்து நடித்தேன் என்று கூறினார்.

    கண்கலங்கினார்

    கண்கலங்கினார்

    டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய கங்கணா ரணாவத், ஏ.எல்.விஜய் அளவிற்கு தன்னை எந்த இயக்குனர்களும் மரியாதையாக நடத்தியது இல்லை என்று கூறி கண்கலக்கினார். இந்த டிரைலர் தற்போது வைரலாகி வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடி உள்ளது.

    வெறும் அரசியல் கதை அல்ல

    வெறும் அரசியல் கதை அல்ல

    முன்னதாக, இவ்விழாவில் பேசிய ஏ.எல்.விஜய், இப்படத்தை வெறும் அரசியல் கதையாக பார்க்காமல், ஆணாதிக்கம் மிகுந்த சமூதயத்தில் ஒரு பெண்ணாக வெற்றி பெற்ற, ஒரு பெரும் ஆளுமைப் பற்றிய படமாக இப்படம் நிச்சயம் இருக்கும் இப்படம் இருக்கும் என்றார்.

    English summary
    Arvind Swamy speech in thalaivi trailer launch
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X