»   »  தயாரிப்பாளர்களுக்கு ஐடியா கொடுத்த அரவிந்த்சாமி.. ஸ்ட்ரைக் பற்றி கருத்து!

தயாரிப்பாளர்களுக்கு ஐடியா கொடுத்த அரவிந்த்சாமி.. ஸ்ட்ரைக் பற்றி கருத்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil
கேளிக்கை வரி ரத்து செய்ய கோரிக்கை!- வீடியோ

சென்னை : தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னெடுப்பில் கடந்த மார்ச் 1-ம் தேதியில் இருந்து நடைபெற்று வரும் வேலை நிறுத்தம் குறித்து நடிகர் அரவிந்த்சாமி தன்னுடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

டிஜிட்டல் நிறுவனங்களின் அதிக கட்டணத்தை எதிர்த்து கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் புதிய படங்கள் எதையும் ரிலீஸ் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்.

Arvindswamy gives idea to producers

மேலும், கடந்த 16-ம் தேதி முதல் படப்பிடிப்புகளும், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, நேற்று முதல் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில படங்கள் மட்டுமே அனுமதி பெற்று படப்பிடிப்பை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், இந்த வேலை நிறுத்தம் குறித்து நடிகர் அரவிந்த் சாமி தன்னுடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார். "என்னைப் பொறுத்தவரை மாஸ்டரிங் அல்லது விபிஎப் செய்வதற்கான கட்டணத்தை தயாரிப்பாளரே ஏற்றுக் கொண்டால் தான் கன்டென்ட் சிதையாமல் இருக்கும்.

அதேபோல அந்த கன்டென்டால் வரும் விளம்பரத்திற்கான லாபமும் தயாரிப்பாளருக்கு கிடைக்க வேண்டும். எந்த விளம்பரம் எவ்வளவு கட்டணம் என்பதையெல்லாம் முடிவு செய்யலாம். வேண்டுமானால் லாபத்தில் விநியோகஸ்தர்களுக்கு பங்கு தரலாம்.

இப்படிச் செய்தால் முதலீடு செய்பவருக்கு லாபம் சரியாகப் போய்ச் சேரும். தொழில்நுட்பத்தை செயல்படுத்துபவருக்கு அல்ல." என்று தெரிவித்துள்ளார் அரவிந்த்சாமி. இது தொடர்பாக சிலர் அவருடன் ட்விட்டரில் விவாத்து வருகிறார்கள்.

English summary
"All ad revenues on content should be with the producer. It may be fair to share it with the Exhibitor." Actor Arvindswamy gives idea to producers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X