»   »  வெள்ளம் பாதித்த 2 லட்சம் குடும்பங்களுக்கு அரவிந்த்சாமி மருத்துவ உதவி!

வெள்ளம் பாதித்த 2 லட்சம் குடும்பங்களுக்கு அரவிந்த்சாமி மருத்துவ உதவி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ 2 லட்சம் மதிப்பிலான மருத்துவ உதவிகளை வழங்குகிறார் நடிகர் அரவிந்த்சாமி.

Arvindswamy provides medical air to 2 lakh families

தமிழ் சினிமாவில் ஒரு இடைவெளிக்குப் பிறகு தனி ஒருவன் படம் மூலம் மீண்டும் தனி முக்கியத்துவம் பெற்றுள்ளார் அரவிந்த்சாமி.

Arvindswamy provides medical air to 2 lakh families

சமீபத்திய பெரும் வெள்ளத்தில் சென்னை மக்கள் சிக்கித் தவித்தபோது, முதல் கட்டமாக 70 ஆயிரம் பேருக்கு இலவச உணவு தந்தார் அரவிந்த்சாமி.

Arvindswamy provides medical air to 2 lakh families

ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்புடன் இணைந்து இரண்டாம் கட்டமாக மருத்துவ உதவிகளை வழங்குகிறார்.

Arvindswamy provides medical air to 2 lakh families

மேலும் குடிநீர் பாட்டில்கள், வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்த எலக்ட்ரால் பவுடர், குளிர்பானங்கள், கெல்லாக்ஸ் போன்றவை அடங்கிய பாக்கெட்டுகளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவிருக்கிறார்.

இதுகுறித்து அரவிந்தசாமி கூறுகையில், "இது எங்களின் இரண்டாம் கட்ட நடவடிக்கை. 2 லட்சம் குடும்பங்களுக்கு இந்த முறை உதவி செய்ய முடிவு செய்துள்ளோம். அதற்கான பொருட்கள் அனைத்தும் வந்துவிட்டன. இன்று அவற்றை பேக் செய்து நாளை வழங்க ஆரம்பித்துவிடுவோம்.

Arvindswamy provides medical air to 2 lakh families

இந்தப் பணியில் எங்களுக்கு பலர் உதவியுள்ளனர். அவர்களுக்கு நன்றி. அடுத்த கட்ட உதவி குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்கப்போகிறோம்," என்றார்.

English summary
Actor Arvindswamy & his friends are going to distribute 2 Lakhs Medical Kits through "Round Table India".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil