»   »  எது சிறந்த போராட்டம்.. அதுவா இதுவா? - நடிகர் அரவிந்த்சாமி கருத்து!

எது சிறந்த போராட்டம்.. அதுவா இதுவா? - நடிகர் அரவிந்த்சாமி கருத்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஏர்போர்ட்டில் பிரதமருக்கு கறுப்புக் கொடி காட்டிய இயக்குனர்கள்- வீடியோ

சென்னை : தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத் தேவையான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுக்கவே கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பாதுகாப்புத்துறை தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இன்று தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழகம் முழுக்க பலத்த எதிர்ப்புக்குரல் ஒலித்தது. #GoBackModi எனும் ஹேஷ்டேக் ட்விட்டரில் உலக அளவில் ட்ரெண்ட் ஆனது. பல இடங்களிலும் மோடிக்கு கறுப்புக்கொடி காட்டியும், கறுப்பு பலூன்களைப் பறக்கவிட்டும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

Arvindswamy tweets about Cauvery protests

காவிரி போராட்டத்தில் அரசியல் கட்சியினரும், திரைத்துறையினரும், பொதுமக்களும் கலந்துகொண்டு வருகின்றனர். இந்தப் போராட்டங்கள் தொடர்பாக நடிகர் அரவிந்த்சாமி ட்விட்டரில் தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

"கடந்த இரண்டு நாட்களில் இரண்டு வழிமுறைகளில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஒரு போராட்டம் நெகட்டிவ் பப்ளிசிட்டியை உருவாக்கியது. சொந்த மாநில மக்களையே வதைக்கும் போராட்டமாக அமைந்தது.

மற்றொரு போராட்டம் உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இந்தப் போராட்டம் தேவையை நோக்கியதாகவும் இருந்தது. எது எதிர்காலத்துக்கான வீரியமான போராட்ட வழிமுறை என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்" எனத் தெரிவித்துள்ளார் அரவிந்த்சாமி.

English summary
Tamilians are protesting to insist to set up CMB. In this case, actor Arvindswamy tweets about these protest forms.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X