»   »  படங்கள் இயக்கப் போகிறேன்...- அரவிந்த்சாமி

படங்கள் இயக்கப் போகிறேன்...- அரவிந்த்சாமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

தனி ஒருவன் படத்துக்குப் பிறகு தனி கவனம் பெற்ற நடிகராகிவிட்ட அரவிந்த்சாமி, அடுத்து படங்களை இயக்க உள்ளதாக பேட்டியளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

"இப்போது ரசிகர்களின் ரசனை மாறிவிட்டது. புது யோசனைகளுக்குத் தயாராக உள்ளார்கள். வழக்கமான படங்களில் ஈடுபட நான் விரும்பவில்லை. நிறைய வாய்ப்புகள் உள்ளதால் அதிலிருந்து நல்ல படங்களைத் தேர்வு செய்கிறேன்

Arvindswamy wants to direct movies

படம் இயக்குவது குறித்து ஒரு திட்டம் உள்ளது. என்னிடம் 2 கதைகள் உள்ளன. அவற்றை ஒருவருடத்துக்குள்ளாகவோ அல்லது விரைவிலோ இயக்க முயற்சி செய்வேன். அது தமிழா ஹிந்தியா என முடிவு செய்யவில்லை."

ரோஜா படம் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமான அரவிந்த் சாமி, தற்போது 15 வருடங்கள் கழித்து அறிமுக இயக்குநர் தனுஜின் இயக்கத்தில் டியர் டாட் என்கிற ஹிந்திப் படத்தில் நடித்துள்ளார். 14 வயது மகனுக்கும் 45 வயது தந்தைக்கும் இடையே உள்ள உறவைச் சொல்லும் படம் இது. தந்தை வேடத்தில் அரவிந்த் சாமி நடித்துள்ளார்.

English summary
Actor Arvindswamy says that he would soon direct a movie in Tamil or Hindi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil