சைக்கிளில் 1540 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்த ஆர்யா...குவியும் வாழ்த்துக்கள்
சென்னை : அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஆர்யா. தொடர்ந்து பல படங்களிலும் ஹீரோ, செகண்ட் ஹீரோ, சப்போர்டிங் ரோல் போன்றவற்றில் நடித்து ஹீரோக்களில் ஒருவராக வளர்ந்துள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை படம் அவருக்கு மிகப் பெரிய வெற்றியை தந்தது. ஓடிடியில் ரிலீசானாலும் இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் வடசென்னை பாக்சராக ஆர்யா நடித்திருந்தார்.
அதன் பிறகு அரண்மனை 3, எனிமி ஆகிய படங்களில் நடித்தார். எனிமி படத்தில் நெகடிவ் ரோலில் நடித்திருந்தார். தற்போது சக்தி கெளந்தர்ராஜன் இயக்கத்தில் ராணுவ அதிகாரியாக ஆர்யா நடத்துள்ள கேப்டன் படம் செப்டம்பர் 8 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த படத்தில் ஆர்யாவின் மனைவி ஷாயிஷாவும் நடித்துள்ளார்.இதைத் தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் ஆர்யா.
இதற்கிடையில் ஆர்யா நடித்த தி வில்லேஜ் வெப் சீரிசும் விரைவில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட உள்ளது. இதனை மிலின்ட் ராவ் இயக்கி உள்ளார். ஆர்யாவின் முதல் வெப் சீரிஸ் இதுவாகும்.
நடிப்பை தாண்டி ஆர்யாவிற்கு சைக்கள் ஓட்டுவது என்றால் தீராத ஆசை. சென்னைக்குள் அடிக்கடி 100 கிமீ வரை சைக்களில் சுற்றி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் ஆர்யா. சினிமா விழாக்களுக்கும் கூட சைக்கிளில் வந்து தான் அசத்துவார்.
சமீபத்தில் நடந்த விக்ரமின் சியான் 61 பட பூஜைக்கு கூட சைக்கிளில் தான் வந்தார் ஆர்யா. ஆர்யாவை பார்த்து ஹீரோக்கள் பலரும் சைக்கிளில் சுற்றும் பழக்கத்தை பழகி வருகின்றனர். இந்த சமயத்தில் சோஷியல் மீடியாவில் ஆர்யா பகிர்ந்துள்ள போட்டோ அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இங்கிலாந்தில், கையில் இந்திய தேசியக் கொடியை சந்தோசமாக அசைத்தபடி நிற்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார் ஆர்யா. அதோடு, லண்டனின் எடின்பர்க் நகரில் நடந்த சைக்கிள் போட்டியில் 1540 கிமீ.,க்களை தனது டீமுடன் இணைந்து அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார் ஆர்யா.
இது தனது வாழ்க்கையில் மிக சவாலான முயற்சி என்றும், இதற்கு சப்போர்ட் செய்த தனது குடும்பம், நண்பர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். அதுமட்டுமல்ல அடுத்த சவாலுக்கு தயாராவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.தனது டீமுடன் இருக்கும் போட்டோக்கள் சிலவற்றையும் ஆர்யா மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











