Just In
- 2 hrs ago
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- 3 hrs ago
தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!
- 5 hrs ago
தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்!
- 6 hrs ago
ரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு நீங்களே பாருங்க!
Don't Miss!
- News
திருவண்ணாமலை திருவூடல் திருவிழா: நந்திக்கு தரிசனம் தந்த அண்ணாமலையார் - சூரியனுக்கும் காட்சி
- Automobiles
எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Lifestyle
கோதுமை ரவை பாயாசம்
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பின்னாடியே இப்படி இருக்குன்னா.. முன்னாடி மிரட்டுமே.. நாளைக்கு ’ஆர்யா 30’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!
சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்யாவின் 30வது படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகிறது.
தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ இயக்குநர் பா. ரஞ்சித் மற்றும் நடிகர் ஆர்யா தற்போது வெளியிட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து #Arya30 என்ற ஹாஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.
காங்கிரஸில் இருந்து விலகியவர்.. உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனாவில் இணைந்தார் பிரபல நடிகை!

ஆர்யா 30
2005ம் ஆண்டு அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஆர்யா. தொடர்ந்து அதே ஆண்டில், உள்ளம் கேட்குமே, ஒரு கல்லூரியின் கதை என வரிசையாக அவரது படங்கள் வெளியாகின. அறிமுகப்படத்திலேயே தென்னிந்தியாவின் சிறந்த அறிமுக நடிகர் விருதை வென்ற நடிகர் ஆர்யா, இப்போ தனது 30 படத்தின் அறிவிப்பை எதிர்நோக்கி உள்ளார்.

மிரட்டல் நடிப்பு
நடிகர் ஆர்யாவால் சாக்லெட் பாயாகவும் நடிக்க முடியும், மெத்தட் ஆக்டராகவும் மாற முடியும். நடிப்புக்கு சவால் விடும் ஏகப்பட்ட படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளவர் ஆர்யா. பாலா இயக்கத்தில் வெளியான நான் கடவுள், அவன் இவன், சமீபத்தில் வெளியான மகாமுனி உள்ளிட்ட பல படங்களில் ஆர்யாவின் வேற லெவல் ஆக்டிங்கை தமிழ் சினிமா கண்டு ரசித்துள்ளது.

டெடிக்கு வெயிட்டிங்
ஜாலியா டெடி என்கிற ஒரு படத்தை இயக்குநர் சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார் ஆர்யா. ஹாலிவுட் படங்களை குறைந்த பட்ஜெட்டில் தமிழ் மொழியிலும் வித்தியாசமாக கதை சொல்லி எடுக்க முடியும் என்பதை, டிக் டிக் டிக், மிருதன், என தொடர்ந்து சொல்லி வரும் சக்தி சவுந்தர்ராஜனின் டெடிக்கு ரசிகர்கள் வெயிட்டிங்.

பா. ரஞ்சித் இயக்கத்தில்
இந்நிலையில், நடிகர் ஆர்யா இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வரும் பாக்ஸிங் கதையை மையமாக கொண்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை காலை 11 மணிக்கு வெளியாகிறது. அதன் அறிவிப்பை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.

ஃபர்ஸ்ட் ரவுண்ட்
இறுதிச்சுற்று என சுதா கொங்கரா மாதவன், ரித்திகா சிங்கை வைத்து படம் எடுத்த நிலையில், ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட, ஃபர்ஸ்ட் ரவுண்ட் என கேப்ஷன் போட்டு பா. ரஞ்சித் ஆர்யாவின் 30வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ட்விட்டரில் #Arya30 என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

பின்னாடியே இப்படின்னா
சல்பேட்டா, சல்பேட்டா பரம்பரை என இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக ஏகப்பட்ட தகவல்கள் முன்னதாக வெளியாகி உள்ளன. படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் நாளை வெளியாகும். இந்த படத்திற்காக முரட்டுத் தனமான உடற்கட்டுக்கு ஆர்யா மாறிய ஜிம் புகைப்படங்கள் சில மாதங்களுக்கு முன்னதாக வெளியாகி வைரலாகின. இந்நிலையில், பின்னாடி திரும்பி நின்றபடி ஆர்யா இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், பின்னாடியே இப்படி இருக்குன்னா, முன்னாடி எப்படி இருக்கும் என மிரண்டு போயுள்ளனர்.