»   »  மஞ்சள் சிவப்பழகி அனுஷ்கா ஆகிறார் ... இஞ்சி இடுப்பழகி....!

மஞ்சள் சிவப்பழகி அனுஷ்கா ஆகிறார் ... இஞ்சி இடுப்பழகி....!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மெல்லிய இடையாள் என்றும் இஞ்சி இடுப்பழகி என்றுப் பெண்களை பாராட்டுவது சங்க காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது. இன்று அந்த அடைமொழியை, வர்ணனையை விரும்பும் பெண்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே வருகிறது.

இதைக் காசாக்கத்தான் எண்ணற்ற விவாதங்கள், ஆலோசனை கூட்டங்கள், வர்த்தக விளம்பர யுத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Arya - Anushka in Inji Iduppazhagi

பரவலாக பேசப்படும் இந்த விஷயத்தைத்தான் பி வி பி சினிமா நகைசுவை மிளிர சொல்ல வருகிறது.

Arya - Anushka in Inji Iduppazhagi

பழம்பெரும் இயக்குனர் ராகவேந்திர ராவ் அவர்களின் மகனும், தெலுங்கில் பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கியவருமான கே .எஸ். பிரகாஷ் தனது இயக்கத்தில் 'இஞ்சி இடுப்பழகி' என்ற தலைப்பில் இந்தப் படத்தை இயக்குகிறார்.

படம் குறித்து பிரகாஷிடம் பேசினோம்...

'இஞ்சி இடுப்பழகி என்ற இந்தத் தலைப்பே கதை சொல்லும். உடல் வாகைப் பற்றிய படம் என்பதால் உலகமே போற்றும் ஆணழகனும், பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகைக் கொண்ட அனுஷ்காவும் தான் நடிக்க வேண்டும் என்பதை எந்த விவாதமும் இன்றி ஒருமனதாகத் தீர்மானித்தோம்.

அப்படி ஒரு அபூர்வ ஜோடியான ஆர்யாவும் அனுஷ்காவும் நடிக்கும் பொழுது அதை கண்கவர் வண்ணத்தில் பதிவு செய்ய நீரவ் ஷாவே பொருத்தமானவர் என்பதால் அவருடன் இணைந்து பணி செய்கிறேன்.. செவிகளுக்கு தேனூட்டும் இசையைத் தர மரகதமணி இசையமைக்கிறார்.

Arya - Anushka in Inji Iduppazhagi

எனது தகப்பானார் ராகவேந்திர ராவ் அவர்களுக்கு தமிழ் திரை உலகில் இருக்கும் மரியாதையையும், நன்மதிப்பையும் கண்டு வியந்து போனேன். நானும் அவர் வழியில் நல்ல திரைப்படங்களை இயக்கி அந்த நற்பெயரையும் ரசிகர்களையும் சம்பாதிப்பேன்," என்றார் நம்பிக்கையுட ன்.

இன்று 'இஞ்சி இடுப்பழகி' படத்தின் பூஜை ஏ வி எம் அரங்கில் உள்ள பிள்ளையார் கோவிலில் விமரிசையாக நடந்தது. பல்வேறு நட்சத்திரங்கள் , தொழில் நுட்ப கலைஞர்கள் , தயாரிப்பாளர்கள் என திரை உலக பிரமுகர்கள் திரண்டு வந்து படக் குழுவினரை வாழ்த்தினர்.

English summary
Arya - Anushka have paired up for the second time in PVP cinemas Inji Iduppazhagi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil