»   »  எங்கிருந்தாலும் வாழ்க... நயனை நினைத்து பாடும் ஆர்யா

எங்கிருந்தாலும் வாழ்க... நயனை நினைத்து பாடும் ஆர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

இப்ப எல்லாம் இயக்குநருங்க லவ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்கப்பா என்று கூறுவது வேறு யாருமல்ல பிக் அப் நடிகர் ஆர்யாதான். அவரது தோழி நயன்தாரா இயக்குநரை காதலிப்பதாக தகவல் வெளியானது. இந்த திருமணத்துக்கு உங்களை அழைப்பாரா என்று செய்தியாளர்கள் கேட்டதற்குத்தான் இப்படி ஒரு பதிலை கூறியுள்ளார் ஆர்யா.

நயன்தாரா எங்கிருந்தாலும் வாழ்க. காதலில் ஜெயித்தாலும் ஜெயிக்காவிட்டாலும் அவர் என்றும் எனக்கு தோழிதான் என்றும் சேர்த்து சில பிட்டை போட்டுள்ளார் ஆர்யா.

ஆர்யாவின் 'தி ஷோ பீப்பல்' தயாரிக்கும் திரைப்படம் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க'. ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, சந்தானம், தமன்னா, முக்தா பானு, வித்யுலேகா ஆகியோர் நடித்துள்ளனர். வி.எஸ்.ஓ.பி என அழைக்கப்பட்டு வரும் இந்தப்படத்தில் நடிப்பது பற்றி ஆர்யா செய்தியாளர்களிடம் பேசினார்.

காதல் கதையில் நான்

காதல் கதையில் நான்

பாஸ் என்கிற பாஸ்கரன் படம் போல் இதுவும் காதல், நகைச்சுவை, நட்பு கலந்த கதை. இயக்குனர் ராஜேஷுக்கும் எனக்கும் கெமிஸ்ட்ரி ரொம்பவே நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருப்பதால் இப்படத்தை நானே தயாரிக்க முடிவு செய்தேன்.

கல்யாணம் எப்போது?

கல்யாணம் எப்போது?

எனக்கு எப்போ திருமணம் என்று கேட்கிறார்கள். விஷாலுக்கு திருமணம் முடிந்தபிறகுதான் எனக்கு திருமணம். அவரோ நடிகர் சங்கம் கட்டியபிறகுதான் திருமணம்

பழி போடும் விஷால்

பழி போடும் விஷால்

முதலில், ஆர்யாவுக்கு திருமணம் முடிந்தபிறகு தனக்கு நடக்கும் என்று என் மீது பழிபோட்டார். இப்போது நடிகர் சங்கம் மீது பழிபோடுகிறார். அவருடன் மீண்டும் சேர்ந்து நடிப்பேன்.

கெஸ்ட் ரோலில் நடிப்பேன்

கெஸ்ட் ரோலில் நடிப்பேன்

கெஸ்ட் ரோலில் நடிப்பது பற்றி கேட்கிறார்கள். அதற்காக நான் இமேஜ் பார்ப்பதில்லை. என்னிடம் யாரும் பணம் கேட்பதில்லை. கெஸ்ட்ரோலில் நடிக்கச் சொல்லி உதவி கேட்கிறார்கள். அதை தொடர்ந்து செய்வேன் என்று கூறினார் ஆர்யா.

எங்கிருந்தாலும் வாழ்க

எங்கிருந்தாலும் வாழ்க

எனது பிரண்ட் நயன்தாரா தனது திருமணத்துக்கு என்னை அழைப்பாரா என்று கேட்கிறார்கள். அவர் எங்கிருந்தாலும் வாழ்க. காதலில் ஜெயித்தாலும் ஜெயிக்காவிட்டாலும் அவர் என்றும் எனக்கு தோழிதான் என்று கூறி முடித்தார்

பிரியாணி போட்டும் யாரையும் பிக்அப் பண்ண முடியலையே என்பது ஆர்யாவின் ஆதங்கம்!

English summary
Actor Arya has blessed his former close friend Nayanthra for her bright future
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil