»   »  சமாதானப்படுத்த வந்த ஆர்யாவை 'நோஸ் கட்' செய்த ஸ்ரேயா!

சமாதானப்படுத்த வந்த ஆர்யாவை 'நோஸ் கட்' செய்த ஸ்ரேயா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகர் ஆர்யா, தனது திருமணத்திற்கு கலர்ஸ் டி.வி-யின் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியின் மூலம் பெண் தேடி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. 16 பெண்களுடன் தொடங்கிய அந்த நிகழ்ச்சியில் இப்போது 6 பெண்களே உள்ளனர்.

ஒவ்வொரு ரவுண்டாக போட்டிகள் நடத்தி ஒவ்வொருவராக எலிமினேட் செய்து வருகிறார் ஆர்யா. முடிவில் வெற்றிபெறும் ஒருவரைத்தான் ஆர்யா திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Arya got nose cut in enga veettu mappillai show

ஆர்யா யாரைத் திருமணம் செய்ய போகிறார் என்பது இன்னும் தெரியவில்லை. இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. சமீபத்தில் அந்த நிகழ்ச்சியில் இருந்து ஸ்ரேயா என்ற போட்டியாளர் வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேற்றப்படுவதாக அறிவித்தபிறகு ஆர்யா அவரை சமாதானம் செய்ய முயற்சித்தார்.

ஆனால் ஸ்ரேயா ஆர்யாவை பேசவிடாமல் "நீங்கள் எதுவும் கூறவேண்டாம். அதுதான் பெட்டர். அப்போது தான் நான் கொஞ்ச நாளில் சரியாகிவிடுவேன்" என கூறி மற்றவர்களுக்கு பை சொல்லிவிட்டு ஆர்யாவிடம் சொல்லிக்கொள்ளாமல் அங்கிருந்து வெளியேறிவிட்டார்.

அப்போது ஆர்யா கொஞ்சம் அப்செட் ஆகிவிட்டாராம். ஆனாலும், ஒருவரைத்தானே திருமணம் செய்யமுடியும். ஆனால், போட்டியின் மூலம் பெண்ணைத் தேர்ந்தெடுப்பது சரியில்லை என நிகழ்ச்சிக்கு எதிராகப் பலரும் குரல் கொடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. திருமணம் செய்துகொள்கிறாரா என்பதை இன்னும் சில வாரங்களில் பார்த்து விடலாம்.

English summary
Arya looking for a bride via 'Enga veettu mappillai' show. After the announcement of Shreya's elimination from the show, Arya got nose cut, when he tried to convince her.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X