»   »  சீரியஸான பிரச்சனையில் ஆர்யா: உங்களால் முடிந்தால் உதவுங்களேன்!

சீரியஸான பிரச்சனையில் ஆர்யா: உங்களால் முடிந்தால் உதவுங்களேன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனக்கு சீரியஸான பிரச்சனை இருப்பதாகக் கூறி ரசிகர்களிடம் உதவி கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார் நடிகர் ஆர்யா.

நடிகர்கள் ஆர்யாவுக்கும், விஷாலுக்கும் எப்பொழுது திருமணம் என்பது தான் பலரும் கேட்கும் கேள்வியாக உள்ளது. ஆர்யாவும், விஷாலும் ஒருவரையயொருவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று அவர்கள் நம்புவதாக நடிகர் ஜெயம் ரவி அண்மையில் தெரிவித்தார்.

அந்த அளவுக்கு அவர்களின் திருமண பேச்சு பெரிதாகிவிட்டது.

ஆர்யா

ஆர்யா

ஆர்யாவுக்கு 36 வயதாகுகிறது. அவரது வாழ்வில் காதலிகள் வந்து போகிறார்களே தவிர யாரும் நிலைத்து நிற்கவில்லை. அவருக்கு வீட்டில் பெண் தேடும் படலம் வெகு காலமாக நடக்கிறது. ஆனால் இதுவரை ஒரு பெண்ணும் அமையவில்லை.

வீடியோ

ஆர்யா சார்பில் வரலட்சுமி சரத்குமார் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஆர்யா கூறியிருப்பதாவது, ஹாய் நான் ஆர்யா. நான் ஒரு சீரியஸான பிராப்ளத்தில் இருக்கிறேன். எனக்கு உதவி தேவை. உங்களின் ஆதரவு தேவை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் பண்ணுங்க. எனக்கு ஒரு கேர்ள் பிரெண்ட் வேண்டுமடா, ப்ளீஸ் ஹெல்ப் என்று தெரிவித்துள்ளார்.

கேர்ள் பிரெண்ட்

கேர்ள் பிரெண்ட்

ஆர்யா வீடியோவில் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு பேசியுள்ளார். அவருக்கு கேர்ள் பிரெண்ட் கிடைக்க உங்களால் முடிந்தால் உதவி செய்கப்பா.

ரம்யா

ஆர்யாவின் வீடியோவை பார்த்துவிட்டு டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி ரம்யா ட்வீட்டியிருப்பதாவது, அட போங்கப்பா! நானும் ஏதோ டென்ஷா புள்ள ஃபர்ஸ்ட் டைம் சீரியஸா பேசுதே என்னவோ ஏதோன்னு பார்த்தா என்று தெரிவித்துள்ளார்.

English summary
Actor Arya has asked his fans to help him get a girl friend. It is noted that the 36-year-old actor is still single.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil