»   »  எடையை குறைக்க திணறும் அனுஷ்கா: உதவிக்கு வந்த ஆர்யா

எடையை குறைக்க திணறும் அனுஷ்கா: உதவிக்கு வந்த ஆர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உடல் எடையை குறைக்க முடியாமல் திண்டாடும் அனுஷ்காவுக்கு நண்பேன்டா ஆர்யா அறிவுரை வழங்கியுள்ளார்.

இஞ்சி இடுப்பழகி படத்திற்காக அனுஷ்கா தனது உடல் எடையை 20 கிலோ அதிகரித்தார். ஆனால் உடல் எடையை கூட்டிய அவரால் குறைக்க முடியவில்லை. அவரும் ஜிம், யோகா எல்லாம் செய்தும் எடை மட்டும் பாவம் குறையவில்லை.

இந்த எடையே அவருக்கு தற்போது பிரச்சனையாகியுள்ளது.

பாகுபலி

பாகுபலி

அனுஷ்கா குண்டாக இருப்பதால் பாகுபலி 2 படத்தில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட முடியவில்லை. இதனால் ராஜமவுலி எரிச்சலில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ராஜமவுலி

ராஜமவுலி

பாகுபலி படத்தில் எப்படி இருந்தீர்களோ அதே போன்று இருந்தால் தான் இரண்டாம் பாகத்தில் உங்களின் காட்சிகளை படமாக்க முடியும் என்று இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி அனுஷ்காவிடம் கூறிவிட்டார்.

எடை குறைப்பு

எடை குறைப்பு

நீங்க ஜிம்முக்கு போவீங்களோ, யோகா செய்வீங்களோ இல்லை வெளிநாட்டுக்கு போய் ஆபரேஷன் செய்வீங்களோ எனக்கு தெரியாது. உடல் எடையை 15 கிலோ குறைத்துவிட்டு வாங்க என ராஜமவுலி அனுஷ்காவிடம் கறாராக கூறிவிட்டாராம்.

ஆர்யா

ஆர்யா

அனுஷ்கா தனது நல்ல நண்பர் ஆர்யாவை தொடர்பு கொண்டு உடல் எடையை குறைக்க டிப்ஸ் கேட்டுள்ளார். சைக்கிளில் தினமும் 20 கிலோமீட்டர் செல்லுங்கள், எடை தானா குறையும் என்று அறிவுரை வழங்கியுள்ளார் ஆர்யா.

English summary
Arya has advised good friend Anushka to do cycling to get back to shape for Baahubali 2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil