»   »  மகேஷ்பாபு, ஜெயம் ரவியுடன் இணையும் ஆர்யா!

மகேஷ்பாபு, ஜெயம் ரவியுடன் இணையும் ஆர்யா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சுந்தர் சி இயக்கும பிரமாண்ட பட்ஜெட் படத்தில் நாயகர்களாக ஏற்கெனவே மகேஷ் பாபு, ஜெயம் ரவி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த பிரமாண்ட படத்தில் இப்போது ஆர்யாவும் ஹீரோவாக இணைந்துள்ளார்.

Arya joins with Sundar C

இந்தப் படத்திற்கு 'சங்கமித்ரா' என்று பெயர் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வ தலைப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை.

சரித்திரப் பின்னணியில் உருவாகும் இப்படம் தேனாண்டாள் பிலிம்ஸுக்கு 100-வது படம். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கமலக்கண்ணன் விஷுவல் எபெக்ட்ஸ் பணிகளை மேற்கொள்கிறார். இவர் ஏற்கெனவே சூர்யா நடிப்பில் வெளிவந்த 'ஏழாம் அறிவு' படத்திற்கு விஷுவல் எபெக்ட்ஸ் பணிகளை மேற்கொண்டுள்ளார். சதீப் சட்டார்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தில் முதலில் நடிக்க விஜய், சூர்யா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். நீண்ட நாட்கள் கால்ஷீட் கேட்டதால் இருவரும் இப்படத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Aarya is joining with Mahesh Babu and Jayam Ravi under Sundar C direction.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil