Don't Miss!
- News
வந்தே பாரத் ரயிலின் ஸ்மால் வெர்ஷன்.. விரைவில் வருகிறது 'வந்தே மெட்ரோ' இதுல என்ன ஸ்பெஷல்?
- Technology
அடி தூள்: சோனி கேமரா சென்சார் வசதியுடன் களமிறங்கும் 2 புதிய விவோ போன்கள்.!
- Finance
Mukesh Ambani: மீண்டும் முதல் இடம்.. ஒரு வருட கௌதம் அதானி ஆதிக்கம் முடிந்தது.. 16வது இடம்..!
- Sports
ஐபிஎல் தொடரால் ஆபத்து.. இந்திய அணியா? ஐபிஎல் அணியா எது முக்கியம்.. ரவி சாஸ்திரி கொடுத்த எச்சரிக்கை
- Lifestyle
உங்க பிறந்த தேதி 8,17 மற்றும் 26 இதுல ஒன்னா? அப்ப உங்க எதிர்காலம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
- Automobiles
சான்ஸே இல்ல... ஃபார்முலா 1 கார்களின் டயர்கள் அதன்பின் இதற்கு யூஸ் பண்ண படுகிறதா!! யாராலயும் யூகிக்கவே முடியாது
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஹாலிவுட் தரத்தில் சிலிர்க்க வைக்கும் ‘கேப்டன்’ ட்ரெய்லர்: ஆர்யாவுக்கு ப்ளாக் பஸ்டர் ஹிட் கன்ஃபார்ம்
சென்னை: ஆர்யா நடித்துள்ள 'கேப்டன்' திரைப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
Recommended Video
சக்தி செளந்தர்ராஜன் இயக்கியுள்ள 'கேப்டன்' படத்தின் ட்ரெய்லர் ஹாலிவுட் தரத்தில் உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
பிரமாண்டமாக உருவாகியுள்ள 'கேப்டன்' படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது.
ரஜினி முதல் ஆர்யா வரை...ராணுவ அதிகாரி ரோலில் கம்பீரம் காட்டிய ஹீரோக்கள்

மீண்டும் இணைந்த வெற்றிக் கூட்டணி
ஆர்யா, இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன், டி இமான் கூட்டணியில் வெளியான ‘டெடி' திரைப்படம், நேரடியாக ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருந்தது விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம், ஆர்யாவின் ஹிட் லிஸ்ட்டிலும் இணைந்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து இதே கூட்டணி ‘கேப்டன்' படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. தற்போது இந்தப் படத்தின் ட்ரெய்லரும் வெளியாகி மிரட்டி வருகிறது.

மிரட்டும் கேப்டன் ட்ரெய்லர்
ஆர்யா ராணுவ வீரராக நடித்துள்ள ‘கேப்டன்' படத்தின் ட்ரெய்லர், தற்போது வெளியானது. இப்படத்தில் வெற்றிச்செல்வன் என்ற ராணுவ கேப்டனாக ஆர்யா நடித்துள்ளார். ட்ரெய்லர் தொடங்கியதில் இருந்தே மிரட்டலுடன் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அதிரடி ஆக்சன் காட்சிகளுக்கு குறையே இல்லாத, கேப்டன் ட்ரெய்லர், ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடும் வகையில் இருப்பதாகவும், ரசிகர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

ஏலியன்ஸ்களுடன் போராடும் ஆர்யா
'கேப்டன்' படம் உருவாகும் போதே, இது சயின்ஸ் திரில்லர் படமாக இருக்கும் என சொல்லப்பட்டது. அதை தற்போது வெளியான கேப்டன் படத்தின் ட்ரெய்லர் கன்ஃபார்ம் செய்துள்ளது. அடர்ந்த காட்டுக்குள் புதைந்து கிடக்கும் வித்தியாசமான மிருகங்களை வேட்டையாடுகிறது ஆர்யா அண்ட் டீம். இது ஏலியன்ஸ்களாக இருக்கலாம் என ட்ரெய்லரில் லீடும் கொடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த டிரெய்லரில் உள்ள பல காட்சிகள், ஹாலிவுட்டில் அர்னால்டு நடித்த 'பிரிடேட்டர்'படத்தை நினைவூட்டுவதாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

கேப்டன் செப்டம்பரில் ரிலீஸ்
ஆர்யா ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமியும், முக்கியமான பாத்திரங்களில் சிம்ரன், ஹரிஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி, தியாகரராஜன் ஆகியோரும் நடித்துள்ளனர். டி. இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘கேப்டன்' படத்தின் வெளியீட்டு உரிமையை, உதயநிதியின் ரெட் ஜெயன்ட்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இத்திரைப்படம் செப்டம்பர் 8ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது வெளியான ‘கேப்டன்' ட்ரெய்லர், இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.