»   »  இது என்னடா ஆர்யா கல்யாணத்துக்கு வந்த புது சோதனை?

இது என்னடா ஆர்யா கல்யாணத்துக்கு வந்த புது சோதனை?

Posted By:
Subscribe to Oneindia Tamil
எங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யாவுக்கு கல்யாணம்!

சென்னை: எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலமும் ஆர்யாவுக்கு திருமணம் நடக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆர்யாவுக்கு திருமணத்திற்கு பெண் தேட நடக்கும் நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிள்ளை. 16 பெண்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தற்போது அகாதா, சூசனா, சீதாலட்சுமி ஆகிய மூன்று பேர் மட்டுமே உள்ளனர்.

இந்த மூன்று பேரில் ஒருவர் தான் ஆர்யாவை திருமணம் செய்யப் போகும் பெண்.

ஆர்யா

ஆர்யா

போட்டியாளர்களில் அபர்னதியிடம் ஆர்யா பல்லை பல்லைக் காட்டி ஜொள்ளு விட்டு கடலை போட்டார். அந்த பெண்ணும் ஆர்யாவை தனது கணவர் போன்று நினைத்து உரிமை கொண்டாடினார். கடைசியில் கண்ணீருடன் வெளியேறினார் அபர்னதி.

சூசனா

சூசனா

அகாதா ஆபாச படத்தில் நடித்தவர் என்று செய்திகள் வெளியாகின. ஏற்கனவே ஒரு பையனுக்கு தாயான சூசனாவை ஆர்யா திருமணம் செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. சீதாலட்சுமி ஆர்யாவுக்கு செட்டாகமாட்டார் என்று ரசிகர்களே தெரிவித்துள்ளனர்.

திருமணம்

திருமணம்

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் பெண் தனக்கு ஆர்யாவை திருமணம் செய்ய விருப்பம் இல்லை என்று கூறும் உரிமை அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பெண்

பெண்

அம்மா, அப்பா தேடியும் பெண் கிடைக்காத நேரத்தில் ஆர்யா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் வெற்றி பெறும் பெண்ணும் ஆர்யாவை வேண்டாம் என்றால் அவரின் திருமணம் கனவாக மட்டுமே இருக்கும்.

English summary
The winner of Enga Veetu Mapillai can tell Arya that she doesn't want to marry him. Fans are already speculating that Arya won't marry the winner.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X