பெண் குழந்தைக்கு ஆர்யா அப்பா ஆகிட்டார்...நான் மாமா ஆகிட்டேன்... சந்தோஷமாக அறிவித்த விஷால்
சென்னை : எனிமி படத்தில் நடித்து முடித்துள்ள ஆர்யா, சார்பேட்டா பரம்பரை படத்தின் வெற்றியை தற்போது கொண்டாடி வருகிறார். இந்த படத்தில் நடித்ததற்காக ஆர்யாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் ஆர்யாவிற்கு கூடுதல் சந்தோஷம் தரும் வகையில் ஆர்யா - சாயிஷா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை சந்தோஷமாக ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஆர்யாவின் நெருங்கிய நண்பரும், நடிகருமான விஷால்.

விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த விஷயத்தை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நான் மாமா ஆகிட்டேன். ப்ரோ ஆர்யாவுக்கும் சாயிஷாவுக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளது. அளவில்லாத சந்தோஷத்தை அனுபவிக்கிறேன். அவர்களுக்கு என வாழ்த்துக்கள். ஆர்யாவிற்கு அப்பாவாக புதிய பொறுப்பு வந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

கஜினிகாந்த் படத்தில் இணைந்து நடித்த போது ஆர்யா - சாயிஷா இடையே காதல் ஏற்பட்டது. இவர்களுக்கு 2019 ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. நண்பர்கள், குடும்பத்தினர்கள் என இவர்களின் திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
ஆர்யாவும் சாயிஷாவும் திருமணத்திற்கு பிறகும் ஒன்றாக இணைந்து காப்பான் உள்ளிட்ட சில படங்களில் நடித்தனர். ஆர்யா தற்போது அரண்மனை 3 படத்தில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











