நடுக்கடலில் டைட்டானிக் போஸ் கொடுத்த ஆர்யா – சாயிஷா...பொறாமையில் பொங்கும் ரசிகர்கள்
சென்னை : நடுக்கடலில் கப்பல் பயணத்தின் போது டைட்டானிக் போஸ் கொடுத்த போட்டோவை பகிர்ந்து ரசிகர்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டுள்ளது ஆர்யா - சாயிஷா ஜோடி.
கோலிவுட்டின் புகழ்பெற்ற நட்சத்திர காதல் தம்பதிகளில் ஆர்யா - சாயிஷாவும் ஒருவர். அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் அறிமுகமான ஆர்யா, நடிகையான சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2019 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது.

பாராட்டை தந்த சார்பட்டா பரம்பரை
ஆர்யாவும்- சாயிஷாவும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். கடைசியாக டெடி படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். சமீபத்தில் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை படம் அவருக்கு முதல் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்று வந்தது. ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட்டிருந்தாலும் மிகப் பெரிய பாராட்டை பெற்று, சர்வதேச அளவில் வரவேற்பை பெற்றது.

எமினியில் வில்லன்
இதனைத் தொடர்ந்து எனிமி படத்தில் வில்லன் ரோலில் நடித்த ஆர்யா, தற்போது பல படங்களிலும் நடிக்க கமிட் ஆகி வருகிறார். சைக்கிளிங்கில் அதிக ஆர்வம் கொண்ட ஆர்யா, சைக்கிள் ரேசில் பல பதக்கங்களை வென்றுள்ளார். இவரைப் போலவே இவரது மனைவி சாயிஷாவும் ஃபிட்னசில் அதிக அக்கறையும், ஆர்வமும் கொண்டவர்.

சைக்கிளிங் போட்டோக்கள்
ஆர்யா பெரும்பாலும் தனது இன்ஸ்டா பக்கத்தில் சைக்கிளிங் சென்றது போட்டோக்கள், புதிய படங்களின் போஸ்டர்கள், அதற்காக மேற்கொள்ளும் பயிற்சிகள் உள்ளிட்ட போட்டோக்களையே பகிர்வார். மிக அரிதாகவே மனைவி சாயிஷாவுடன் இருக்கும் போட்டோவை பதிவிடவார். அதுவும் பிறந்தநாள், திருமண நாள் போன்ற முக்கிய தருணங்களில் மட்டுமே போட்டோ பகிர்வார்.

ஆர்யா பாணியில் சாயிஷா
இதே போல் சாயிஷாவும் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்கள், போட்டோக்களையே அதிகம் பதிவிடுவார். முக்கிய நாட்களில் மட்டுமே வாழ்த்து சொல்ல கணவர் ஆர்யாவுடன் இருக்கும் போட்டோவை பகிர்வார். இந்நிலையில் கப்பலில் நடுக்கடலில் பயணம் செய்த போது டைட்டானிக் படத்தில் வரும் புகழ்பெற்ற போசான படகின் நுனியில், தனது ஜோடியுடன் கைகளை விரித்தபடி இருப்பது போல் போஸ் கொடுத்த போட்டோவை ஆர்யா - சாயிஷா ஜோடி பகிர்ந்துள்ளனர்.

டைட்டானிக் ஸ்டைல் போஸ்
ஆனால் இது தற்போது எடுக்கப்பட்ட போட்டோ இல்லையாம். பழைய போட்டோவை தான் சாயிஷா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்து விட்டு ரசிகர்கள், இதற்கு எனிமி 2 படமே பண்ணிருக்கலாம். சாவடிக்கிறாங்களே. நல்லா என்ஜாய் பண்ணுங்க என பலர் கமெண்ட் செய்துள்ளனர். அதே சமயம் ஏராளமானோர் ரெட் ஹார்ட் எமோஜிக்கலால் கமெண்ட்டை நிரப்பி உள்ளனர். இதை சாயிஷா பகிர்ந்த இரண்டு மணி நேரத்தில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications











