»   »  தெறிக்கும் கடம்பன் டீஸர்: பாராட்டுபவர்களுக்கு கை வலிக்க வலிக்க உம்மா கொடுக்கும் ஆர்யா

தெறிக்கும் கடம்பன் டீஸர்: பாராட்டுபவர்களுக்கு கை வலிக்க வலிக்க உம்மா கொடுக்கும் ஆர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடம்பன் டீஸரில் ஆர்யா அசத்தலாக உள்ளார். இந்நிலையில் தன்னை பாராட்டுபவர்களுக்கு எல்லாம் நன்றி தெரிவித்தே ஆர்யாவுக்கு கை வலித்துவிடும் போல.

ராகவன் இயக்கத்தில் ஆர்யா, கேத்ரீன் தெரஸா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கடம்பன். இந்த படத்திற்காக ஆர்யா மெனக்கெட்டு தனது லுக்கை மாற்றியுள்ளார். ஜிம்முக்கு போய் உடம்பை கும்மென்று ஆக்கியுள்ளார்.

Arya stuns in Kadamban teaser

இந்நிலையில் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. டீஸரை பார்த்தவர்கள் எல்லாம் ஆர்யாவை இந்தியாவின் டார்சான் என்று பாராட்டி வருகிறார்கள். டீஸரில் ஆடம்பரம் இல்லை அட்டகாசம் இல்லை ஆனால் நன்றாக உள்ளது.

ஆர்யா தனது ஜிம் பாடியை காட்டி ஓடி வந்தே ரசிகர்களை கவர்ந்துவிட்டார். இந்நிலையில் டீஸரை பார்த்தவர்கள் அவரை ட்விட்டரில் பாராட்டி வருகின்றனர். தன்னை பாராட்டுபவர்களுக்கு எல்லாம் நன்றியும், முத்தமுமாக கொடுத்து வருகிறார் ஆர்யா.

அட நேரில் இல்லப்பா ட்விட்டர் முத்தம் தான். கடம்பன் படத்திற்காக 8 பேக்ஸ் வைத்துள்ளார் ஆர்யா. இதற்காக அவர் கடந்த ஓராண்டு காலமாக டயட்டில் இருந்ததுடன் ஜிம்முக்கு சென்று ஒர்க்அவுட்டும் செய்துள்ளார்.

English summary
Arya is all happy as people are praising his Kadaman teaser. Twitter is flooded with wishes.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil