»   »  அமீருடன் இணைந்து நடிக்கும் ஆர்யா?

அமீருடன் இணைந்து நடிக்கும் ஆர்யா?

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் வி.இசட்.துரையின் அடுத்த படத்தில் அமீருடன் இணைந்து ஆர்யா நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

அஜீத் நடித்த முகவரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் வி.இசட். துரை. தொடர்ந்து காதல் சடுகுடு,தொட்டி ஜெயா, நேபாளி போன்ற படங்களை இயக்கினார்.

Arya Team Up with Ameer for His next

கடைசியாக நடிகர் ஷாமை வைத்து இவர் இயக்கிய 6 மெழுகுவர்த்திகள் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்லதொரு வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இவரது அடுத்த படத்தில் அமீருடன் இணைந்து ஆர்யா நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. 2 நாயகர்களைப் பற்றிய இந்தக் கதையில் அமீருடன் நடிக்க ஆர்யா சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறுகின்றனர்.

படத்தின் கதையை இறுதி செய்தவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க துரை திட்டமிட்டு இருக்கிறாராம். இந்தப் படத்திற்கு 'வந்தா மல' புகழ் சாம் டி ராஜ் இசையமைக்கிறார்.

ஆர்யா தற்போது மஞ்சப்பை இயக்குநர் ராகவனின் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். மற்றொருபுறம் இயக்குநர் அமீர் தனது இயக்கத்தில் ஆர்யாவை நடிக்க வைக்க திட்டமிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources Said Arya Next Team Up with Director Ameer for his Next Movie, Directed by V.Z.Durai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil