»   »  லண்டன் டு எடின்பர்க்.... ஆர்யாவின் சைக்கிள் பயணம்... ஸ்பான்சர் ரஜினியின் 2.0!

லண்டன் டு எடின்பர்க்.... ஆர்யாவின் சைக்கிள் பயணம்... ஸ்பான்சர் ரஜினியின் 2.0!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சர்வதேச அளவில் சைக்கிள் போட்டிகளில் அதிக அளவில் பங்கேற்று வரும் தமிழ் நடிகர் ஆர்யாவாகத்தான் இருக்கும்.

இப்போது இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் இருந்து எடின்பர்க் வரை சென்று திரும்பும் சைக்கிள் போட்டியில் ஆர்யா கலந்து கொண்டிருக்கிறார்.


5 நாள் போட்டி

5 நாள் போட்டி

1400 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளிலேயே பயணம் செய்யும் இந்த போட்டி மொத்தம் 5-நாட்கள் நடைபெறுகிறது. கடந்த 30-ந்தேதி தொடங்கியது. இன்று போட்டியின் நான்காவது நாள்.


இந்த சைக்கிள் பந்தயத்தில் 1500-க்கும் மேற்பட்ட சைக்கிள் வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் ஆர்யாவும் ஒருவர்.ஆர்யா

ஆர்யா

இந்த சைக்கிள் பந்தயத்தில் ஆர்யா கலந்து கொள்ள ரஜினியின் ‘2.0' பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா ஸ்பான்சர் செய்கிறது. எனவே ஆர்யா ‘2.0' விளம்பரம் பொறித்த பனியன் அணிந்து இதில் கலந்து கொண்டிருக்கிறார்.


தலைவர் ஆசியுடன்

தலைவர் ஆசியுடன்

"தலைவர் ரஜினி, மற்றும் அக்‌ஷய்குமார் ஆசியுடன் இந்த போட்டியில் கலந்து கொள்கிறேன். ஆதரவுக்கு நன்றி" என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


ஒரு பெரிய நடிகர் படத்துக்கு இன்னொரு நடிகர் சைக்கிள் போட்டியில் கலந்து கொண்டு விளம்பரப்படுத்துவது இதுவே முதல் முறை.இரண்டாவது புரமோ

இரண்டாவது புரமோ

‘2.0' படத்தை விளம்பரப்படுத்த முதலில் ஹாலிவுட்டில் ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டது. இப்போது இங்கிலாந்தில் நடைபெறும் சைக்கிள் பந்தயத்தில் ஆர்யாவுக்கு ஸ்பான்சர் செய்து படத்தை பிரபலப்படுத்துகிறார்கள்.


இந்த பந்தயம் நாளை நிறைவடைகிறது.


அடுத்தது என்ன... ஐபிஎல் மாதிரி ஏதாவது போட்டியை ஸ்பான்சர் செய்வார்களோ?English summary
Actor Arya has participated in London to Edinburg cycle race with the T shirt printed with Rajini and his 2.0 logo.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil