»   »  ஆர்யா பெயரை வைத்தால் குட்டிப் பாப்பா கூடவா இப்படி ஆகும்?

ஆர்யா பெயரை வைத்தால் குட்டிப் பாப்பா கூடவா இப்படி ஆகும்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உன் பெயரை வைத்ததால் என் மகன் பெண்கள் விஷயத்தில் ஏற்கனவே எக்ஸ்பர்ட் என்று கூறியுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.

நடிகர் விஷ்ணு விஷால் தன் நண்பன் ஆர்யாவின் வேண்டுகோளை ஏற்று தனது மகனுக்கு ஆர்யன் என்று பெயர் வைத்துள்ளார். அதாவது ஆர்யாவின் பெயரை தான் ஆர்யன் ஆக்கியுள்ளார்.

இந்நிலையில் முதன் முதலாக ஒரு தந்தையாக தந்தையர் தினத்தை கொண்டாடியுள்ளார் விஷ்ணு விஷால்.

தந்தையர் தினம்

என் மகன் ஆர்யனுடன் முதல் தந்தையர் தினம் என்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார் விஷ்ணு விஷால். தான் தன் மனுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

ஆர்யா

விஷ்ணு விஷாலின் ட்வீட்டை பார்த்த ஆர்யா ட்வீட்டியிருப்பதாவது, முதல் தந்தையர் தினத்தில் உன் கேர்ள்பிரெண்ட்ஸுக்கு மெசேஜ் அனுப்புகிறாயா, உன் மகன் உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறான் மச்சா, அவன் கற்றுக் கொண்டிருக்கிறான் என நினைக்கிறேன் என்றார்.

மகன்

ஆர்யா கிண்டலாக போட்ட ட்வீட்டுக்கு விஷ்ணு விஷால் அளித்துள்ள பதில், உன் பெயர் வச்சிருக்கேன் அவன் ஏற்கனவே எக்ஸ்பர்ட்னு நினைக்கிறேன் என்றார்.

பிக்கப்

பிக்கப்

ஆர்யா பெண்களை எப்படி பிக்கப் பண்ணுகிறார், டிராப் பண்ணுகிறார் என்றே தெரியவில்லை என நடிகர் ஒருவர் கூறியதில் இருந்தே பிக்கப் டிராப் வார்த்தை அவர் பெயரோடு ஒட்டிக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Friendly banter between friends Vishnu Vishal and Arya is so cute.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil