கைது செய்யப்பட்ட போது சிரித்த ஆர்யான் கான்...செம வைரல் ஃபோட்டோ

மும்பை : பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான், மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளான். இதில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்களின் குழந்தைகள் ஆகியோர் கலந்து கொண்ட இந்த பார்ட்டியில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டதை அறிந்து தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கப்பலில் சோதனை நடத்தி உள்ளனர். போதைப் பொருள் பயன்படுத்தியதற்காக ஆர்யான் கான் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆர்யான் கானுக்கு காவல்

ஆர்யான் கானுக்கு காவல்

ஆர்யான் கானின் வாட்ஸ்ஆப் சேட் உரையாடல் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கிறதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாரின் கோரிக்கையை ஏற்று, ஆர்யானின் காவலை இன்று வரை கோர்ட் நீட்டித்தது.

சிரித்தபடி சென்ற ஆர்யான்

சிரித்தபடி சென்ற ஆர்யான்

இந்நிலையில் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்ற போது, போலீசாரின் வாகனத்தில் அமர்ந்து சிரித்தபடியே ஆர்யான் கான் சென்றதாக கூறப்படுகிறது. தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இரு புறமும் அமர்ந்திருக்க, நடுவில் மாஸ்க் அணியாமல் அமர்ந்திருக்கும் ஆர்யான் கான் சிரித்தபடி அமர்ந்துள்ளார். இந்த ஃபோட்டோ தற்போது சோஷியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது.

Recommended Video

Shahrukh Khan மகன் Aryan போதை பொருள் Party நடத்தி கைதாகியுள்ளார் | Gowri Khan
வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

ஆனால் நிஜமாகவே இது ஆர்யான் கைது செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட ஃபோட்டோ தானா, உண்மையிலேயே ஆர்யான் சிரித்த படி போலீசாருடன் சென்றாரா அல்லது எடிட்டிங் செய்யப்பட்டதா என தெரியவில்லை. ஆனால் இந்த ஃபோட்டோவை வைத்து ஆர்யான் கான் மற்றும் ஷாருக்கானை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

கடும் கோபத்தில் நெட்டிசன்கள்

கடும் கோபத்தில் நெட்டிசன்கள்

உங்க அப்பாவிற்கு இருக்கும் பண பலத்தை வைத்து, தப்பித்து விடலாம் என தைரியமா, எல்லா இடங்களிலும் லஞ்சம் ஊடுருவி இருப்பதால் பணத்தை கொடுத்து வெளியே வந்து விடலாம் என்ற திமிரில் உன்னால் சிரிக்க முடியும் என நெட்டிசன்கள் பலவகைகளில் கோபமாக கேள்வி கேட்டும், திட்டியும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

மன உளைச்சலில் ஷாருக்கான்

மன உளைச்சலில் ஷாருக்கான்

டோலிவுட்டை தொடர்ந்து பாலிவுட்டிலும் போதைப் பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சல்மான் கான் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் பலரும் ஷாருக்கானை நேரில் சந்தித்தும், போனில் பேசியும் இது தொடர்பாக பேசி வருகிறார்கள். மகன் கைது செய்யப்பட்டதால் கடும் மன உளைச்சலில் இருக்கும் தன்னை பார்க்க யாரும் வர வேண்டாம் என ஷாருக்கான் கேட்டுக் கொண்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X