ஜெயிலில் இருந்து வீடியோ கால்...பாசத்தில் உருகிய ஷாருக்கான் மகன்
மும்பை : பாலிவுட் டாப் ஹீரோ ஷாருக்கானின் மூத்த மகன் ஆர்யான் கான், போதை பொருள் வழக்கில் அக்டோபர் 1 ம் தேதி கைது செய்யப்பட்டார். மும்பை கடற்கரையில் சொகுசு கப்பலில் நடந்த பார்ட்டியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் ஆர்யான் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். ஆர்யானின் வாட்ஸ்ஆப் சேட் அடிப்படையில் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் அவருக்கு தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நான்கு முறை ஜாமின் மறுப்பு
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யானை வெளியில் கொண்டு வர ஷாருக்கான் பல வகைகளிலும் முயற்சி செய்தார். ஆனால் மும்பை விசாரணை நீதிமன்றம் நான்கு முறையும் ஜாமின் வழங்க மறுத்து விட்டது. ஆர்யானின் காவல் அக்டோபர் 20 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜாமின் மனு மீதான விசாரணையும் அன்று நடைபெற உள்ளது.

வீடியோ கால் பேசிய ஆர்யான்
இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யான், 10 நிமிடங்கள் வீடியோ காலில் பெற்றோருடன் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் சிறையில் உள்ள கைதிகள் வாரத்திற்கு இரண்டு முறை குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேச ஐகோர்ட் அனுமதி அளித்திருந்தது. மற்ற கைதிகளை போல் ஆர்யானுக்கும் 10 நிமிடங்கள் மட்டுமே பெற்றோருடன் பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கண்கலங்கிய ஷாருக்கான்
வீடியோ காலில் தந்தை ஷாருக்கான் மற்றும் தாய் கவுரியிடம் ஆர்யான் கண்கலங்கி பேசி உள்ளார். மகனை பார்த்து ஷாருக்கானும் கண்கலங்கியதாக கூறப்படுகிறது. சிறை அதிகாரிகளின் முன்னிலையிலேயே இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், பொதுவான விஷயங்களையே ஷஆருக்கானும் , ஆர்யானும் பேசிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ரூ.4500 மணியார்டர்
அதோடு ஆர்யான், மும்பை ஆர்துர் ரோடு சிறை கேன்டீனில் சாப்பாடு உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொள்ள அவருக்கு ரூ.4500 மணியார்டரும் அனுப்பப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருக்கும் போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த சிலருடன் ஆர்யானுக்கு தொடர்பு இருப்பதாக கூறி தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸ், ஆர்யானுக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் ஆர்யான் தரப்பு வழக்கறிஞர் இதை மறுத்து வருகிறார்.

ஜாமினுக்கு போராடும் ஆர்யான்
ஆர்யான் மீது தவறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாகவும், அவருக்கும் போதை பொருள் கடத்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஆர்யான் தரப்பு தொடர்ந்து வாதிட்டு வருகிறார். ஆனால் போதைப் பொருள் பயன்படுத்தியது, போதைப் பொருள் தயாரித்து, விற்றது அல்லது வாங்கியது உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் ஆர்யான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு ஜாமின் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











