Don't Miss!
- News
அரசியல்வாதி போல செயல்படக்கூடாது..ஆளுநரை நீக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு வழங்கனும்-திருச்சி சிவா
- Finance
கிரெடிட் கார்டு வாங்க நினைக்கிறீங்களா.. இந்த 5 கட்டணங்களை பற்றி தெரிஞ்சுக்கோங்க!
- Sports
யார் சிறந்த பேட்ஸ்மேன்? சச்சினா? விராட் கோலியா? கபில்தேவ் சொன்ன பளிச் பதில்
- Lifestyle
கேரளா ஸ்பெஷல் இறால் ரோஸ்ட்
- Technology
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- Automobiles
மாருதி கார் மட்டும்தான் மைலேஜ் தருமா? களத்தில் இறங்கிய டாடா! கூடவே பாதுகாப்பாகவும் இருக்க போகுது!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
அவங்கவங்க ப்ளேட்சை அவங்களேதான் கழுவணும்.. கேப்டன் அசீம் போட்ட கன்டிஷன்!
சென்னை : விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி துவங்கி இன்றைய தினம் 50வது நாளை எட்டியுள்ளது.
நிகழ்ச்சியில் இந்த வாரம் ராபர்ட் வெளியேறிய நிலையில் கேப்டன் டாஸ்கில் அசீம் வெற்றி பெற்றுள்ளார்.
இதையடுத்து ஹவுஸ்மேட்ஸ்களுக்கு அவர் பலவிதமான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இதனால் பிக்பாஸ் வீடு களைகட்டியுள்ளது.
கதிரவனை
காதலிப்பது
யார்?
குயின்ஸியா?
ஷிவினா?
பிக்பாஸ்
வீட்டில்
என்ன
தான்
நடக்கிறது!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த மாதத்தில் துவங்கிய நிலையில், இன்றைய தினம் 50வது நாளை எட்டியுள்ளது. பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில் அடுத்தடுத்து சாந்தி உள்ளிட்டவர்கள் எலிமினேட் ஆன நிலையில், சிறப்பாக விளையாடிவந்த ஜிபி முத்து தானே விலகிக் கொண்டார்.

பார்வையாளர்களை கவர்ந்த பிக்பாஸ் சீசன் 6
இதனால் துவக்க நாட்களில் மிகவும் சிறப்பான வகையில் ரசிகர்களை கவர்ந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சிறிது தடுமாறியது. ஆனாலும் அசீம், தனலட்சுமி உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்ச்சி களைகட்டுவதற்கு காரணமாக அமைந்தனர். இந்த வாரம் எலிமினேஷனில் ராபர்ட் வெளியேறியுள்ளார். நித்தம் ஒரு டாஸ்க், நித்தம் ஒரு பிரச்சினை என பார்வையாளர்களை கட்டிப் போட்டு வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி.

50வது நாளை எட்டிய பிக்பாஸ் சீசன் 6
இந்நிலையில் இந்த நிகழ்ச்சி துவங்கி தற்போது 50 நாளை எட்டியுள்ளது. இதனிடையே கேப்டன் டாஸ்கில் வெற்றிபெற்றுள்ள அசீம், தற்போது பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக மாறியுள்ளார். அதிகமான பந்துகளை பிடித்து இந்த கேப்டன் டாஸ்கில் அவர் வெற்றி பெற்றுள்ளார். இதனிடையே சமையல், கிளீனிங் உள்ளிட்ட குழுக்களை பிரித்து அதற்கான காரணங்களையும் அசீம் விளக்கினார்.

தெரியாததை பழக வேண்டும்
குக்கிங் டீமில் ஏடிகே, விக்ரமன், மணிகண்டன் மற்றும் ராம் ஆகியோரை இணைத்தார் அசீம். இதல் ராம் தனக்கு சமையல் குறித்த எதுவும் தெரியாது என்று கூறியதாகவும் ஆனால் தெரியாததை பழகிக் கொள்ள கமல் சார் கூறியதை கருத்தில் கொண்டே தான் ராமை குக்கிங் டீமில் சேர்த்துள்ளதாகவும் அசீம் குறிப்பிட்டார்.

சமையலில் பிசியான விக்ரமன்
இதையடுத்து ஷிவின், ரச்சிதாவிடம் இருந்து சமையல் செய்வது குறித்து குறிப்புகளை கேட்டறிந்த விக்ரமன் அதை செய்ததை பார்த்தபோது மிகவும் அழகாக இருந்தது. இதைத் தொடர்ந்து தற்போது ஹவுஸ்மேட்கள் தாங்கள் சாப்பிடும் தட்டுகள் மற்றும் குடிக்கும் டம்ளர்கள் உள்ளிட்டவற்றை அவரவர்களே கழுவி வைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தங்களது தட்டுகளை கழுவ வேண்டும்
சாப்பிடும் தட்டுகளை வெசல் டீம் கழுவ மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். பெரிய பாத்திரங்களை மட்டுமே வெசல் டீம் கழுவுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். கமல் சார் இதை குறிப்பிட்டதாகவும் அதை ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அசீம் தெரிவித்துள்ளார். முன்னதாக இதை ஜனனியும் சொன்ன போதிலும் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்பதையும் அசீம் குறிப்பிட்டார்.