சிங்கப்பூர் பாப்பாவை எப்படி கடிக்கிறாரு பாருங்க அசல் கோலார்.. என்ன பசிக்குதான்னு கேள்வி வேற!

சென்னை: இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் தமிழர்களை கவர அங்கிருந்து ஒருவரை போட்டியாளராக களமிறக்கி வருகிறது பிக் பாஸ் குழு.

இந்த சீசனில் சிங்கப்பூரில் இருந்து மாடல் அழகியான நிவாஷினியை போட்டியாளராக உள்ளே விட்டுள்ள நிலையில், அவரும் அசல் கோலாரும் செய்து செய்யும் லீலைகளுக்கு அளவே இல்லை என பிக் பாஸ் ரசிகர்கள் புலம்பித் தவிக்கின்றனர்.

கடந்த வாரம் அசல் கோலாரின் அத்துமீறல்கள் குறித்து கமல் கண்டிப்பாரா என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இறுதிவரை ஏமாற்றமே மிஞ்சியது.

அடங்கமறு அத்துமீறு

அடங்கமறு அத்துமீறு

பிக் பாஸ் வீட்டில் அசல் கோலார் தனது ராப் இசையால் ரசிகர்களை கவர்வார் என்று பார்த்தால், அடங்கமறு அத்துமீறு என்பதை எல்லாம் பெண் போட்டியாளர்களை தீண்டுவதிலேயே செலவழித்து வருகிறார். ஒரு பெண் மீதெல்லாம் அவருக்கு காதல் இல்லை என்றும் அனைத்து பெண் போட்டியாளர்களுடனும் ஒட்டி உரசி அவர்கள் முறைத்த பிறகு கையை எடுக்கும் அளவுக்கு கீழ்த்தரமாக விளையாடி வருகிறார் என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

இடம் கொடுத்த சிங்கப்பூர் பாப்பா

இடம் கொடுத்த சிங்கப்பூர் பாப்பா

அசல் கோலாரின் தவறான தொடுதலை புரிந்து கொண்டு ஜனனி, தனலட்சுமி, குயின்ஸி உள்ளிட்ட போட்டியாளர்கள் முறைத்து வரும் நிலையில், சிங்கப்பூர் பாப்பாவான நிவாஷினி இடம் கொடுக்க தம்பி தடவுறது என்ன, கட்டிப்புடிக்கிறது என்ன, படுக்க வச்சிக்கிறது என்ன என எல்லை மீறி வந்த நிலையில், இப்போ வயித்தில் குத்தி விளையாடுவது, கடிப்பது என பார்டர் தாண்டி பாய்ந்து விளையாடி வருகிறார்.

மிட் நைட் மசாலா

மிட் நைட் மசாலா

சேலை கட்டி வந்த நிவாஷினியை பார்த்தால், உன்னை மட்டும் இப்படி வெளியே பார்த்திருந்தா, நடக்கிறதே வேற என டபுள் மீனிங்கில் அசல் பேசியது எல்லாம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அமீரை விட மோசமானவனா இருக்கானே என்றும் மிட் நைட் மசாலா எல்லாம் பிக் பாஸ் 24 மணி நேர ஸ்ட்ரீமிங்கில் நடப்பதாக ரசிகர்கள் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர்.

கையை கடிக்கிறாரு

கையை கடிக்கிறாரு

இந்நிலையில் லேட்டஸ்ட்டாக, நிவாஷினியின் கையை பிடித்து கடிக்கும் அசல் கோலாரின் சில்மிஷங்கள் நிறைந்த வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் அதிகம் ஷேர் ஆகி வருகிறது. நிவாஷினியின் தோள் பட்டை அருகே அசல் கோலார் கடிக்கும் காட்சிகளும், அதுக்கு நிவாஷினி சொன்ன பதிலும் ரசிகர்களை ரொம்பவே ஷாக் ஆக்கி உள்ளன.

என்ன பசிக்குதா

என்ன பசிக்குதா

டேய் என அசல் கோலார் தனது கையை கடிக்கும் போது திட்டும் நிவாஷினி, பின்னர் புரிஞ்சிடுச்சு என்ன பசிக்குதா என குழந்தையை கொஞ்சுவது போல கொஞ்சி வருகிறார். பின்னர் அவர் கைகளை குவித்துக் காட்ட அதையும் ஆசையோடு கடித்து விளையாடி வருகிறார் அசல் கோலார்.

பாவம் நிவாஷினி

பாவம் நிவாஷினி

இந்த வாரம் எப்படியாவது அசல் கோலாரை வெளியே அனுப்ப ரசிகர்கள் முடிவு செய்து விட்டனர். இந்த வார இறுதியில் அசல் கோலார் எவிக்டட் என கமல் கார்டு காட்டினால் அதன் பின்னர் நிவாஷினி யாருடன் கட்டிப் பிடித்து விளையாடுவார், யாரை இப்படி இஷ்டத்துக்கு கடிக்க விடுவார் என நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X