»   »  சுந்தர்.சியின் 'சங்கமித்ரா'வில் இணைந்த 'பஜ்ரங்கி பைஜான்' ஒளிப்பதிவாளர்!

சுந்தர்.சியின் 'சங்கமித்ரா'வில் இணைந்த 'பஜ்ரங்கி பைஜான்' ஒளிப்பதிவாளர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சுந்தர்.சியின் 'சங்கமித்ரா' படத்தில் 'பஜ்ரங்கி பைஜான்' புகழ் அஸீம் மிஸ்ரா ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

சுந்தர்.சி அடுத்ததாக 350 கோடியில் ஒரு சரித்திரப் படத்தை இயக்கவுள்ளார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் 100 வது படமாக உருவாகும் இப்படத்துக்கு 'சங்கமித்ரா' என்று தற்காலிகமாக பெயர் சூட்டியுள்ளனர்.

Aseem Mishra Joined Sundar.C Movie

இப்படத்துக்கு அண்மையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். நடிகர்களாக சூர்யா,விஜய், மகேஷ்பாபு ஆகியோரிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகும் இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக 'பஜ்ரங்கி பைஜான்' புகழ் அஸீம் மிஸ்ராவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இசைக்கு ஏ.ஆர்.ரஹ்மான், கலைக்கு சாபு சிரில், விஎப்எக்ஸ் பணிகளுக்கு கமலக்கண்ணன் என ஒவ்வொரு துறையிலும் புகழ்பெற்றவர்களை படக்குழு ஒப்பந்தம் செய்து வருகிறது.

அந்தவரிசையில் தற்போது அஸீம் மிஸ்ராவும் இணைந்திருக்கிறார்.இப்படத்திற்கான நடிக, நடிகையர் தேர்வு முடிந்தவுடன் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் பட்ஜெட் 'பாகுபலி' மற்றும் '2.ஓ' படத்தை விட அதிகமென்பதால் இந்தியாவின் காஸ்ட்லி படம் என 'சங்கமித்ரா'வைக் குறிப்பிடுகின்றனர்.

English summary
Bajrangi Bhaijaan Fame cinematographer Aseem Mishra Board on Sundar.C's Costliest Film.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil