ரெட் கார்டு மூலம் அசீம் வெளியேற்றமா?..கமல் நடவடிக்கை?

அசீம் பெண்களை இழிவாக பேசி நடந்ததால் அவரை ரெட் கார்டு மூலம் வெளியேற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெண்கள் குறித்து இழிவாக பேசிய அசீம் இன்று அனைவராலும் வெறுத்து விமர்சிக்கப்படுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுப்பது உறுதி என தெரிகிறது.

பேருந்தில் பெண்களை உரசினேன் என்று சொன்ன சரவணனை வெளியேற்றிய பிக்பாஸ் வீடு என்கிற பெருமை காப்பாற்றப்படுமா?நெட்டிசன்கள் கேள்வி

சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படும் நேற்றைய நிகழ்ச்சி

சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படும் நேற்றைய நிகழ்ச்சி

பிக்பாஸ் வீட்டில் நேற்று நடந்த களேபரத்தில் பெண்களை அசீம் நடத்திய விதமும் பேசிய பேச்சும், அதை பெண்களில் பலர் எதிர்க்காமல் இருந்ததும் சில ஆண்போட்டியாளர்கள் அதை நியாயப்படுத்தியதையும் நெட்டிசன்கள் போட்டு கிழித்து வருகின்றனர். ஷிவின், தனலட்சுமி எதிர்த்து கேட்டதால் அவர்கள் மதிப்பு சமூக வலைதளங்களில் கூடியுள்ளது. மைனா போன்ற மூத்த கலைஞர்கள் அதை ரசிக்காமல் அசீமிடம் குறிப்பிட்டதும் நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.

விக்ரமன் முகத்திரை கிழிந்தது..ஆண்போட்டியாளர்களின் அவலம்

விக்ரமன் முகத்திரை கிழிந்தது..ஆண்போட்டியாளர்களின் அவலம்

பெண்ணுரிமை பேசும் பெரியார் சிலையை தனது டேபிளில் வைத்து முற்போக்காளராக காட்டிக்கொண்டு வந்த விக்ரமன், சாதாரண அசீம் என்கிற நபரை எதிர்க்க துணிவில்லாமல் அடங்கி போனதை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சாதாரண வீட்டுக்குள்ளேயே பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதியை கேட்க முடியாதவர் வெளியில் எப்படி கேட்பார் என கேட்கின்றனர். பிக்பாஸ் வீட்டில் நவீன நாகரீக ஆண் போட்டியாளர்கள் பெண் போட்டியாளர்களுக்கு வரும் பிரச்சினையை தட்டிக்கேட்க துணிவில்லாதவர்களாக இருந்ததும் சிலர் அதை நியாயப்படுத்தியதும் பெண் பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அசீம் செயலால் இறுக்கம் நிலவும் பிக்பாஸ் வீடு

அசீம் செயலால் இறுக்கம் நிலவும் பிக்பாஸ் வீடு

பிக்பாஸ் வீட்டுக்குள் ஒருவித இறுக்கம் நிலவுகிறது. அதையும் தாண்டி சமூக வலைதளங்களில் இந்த பிரச்சினையை இன்று கமல்ஹாசன் தட்டிக்கேட்பாரா? என்கிற கேள்வியையும் வைக்கின்றனர். குறைந்தப்பட்சம் அசீமை சிறைக்கு கூட அனுப்ப முடியாமல் தைரியமில்லாமல் ஏமாந்த சோணகிரி ராம்குமார், ஜனனியை சிறைக்கு அனுப்பியதையும் விமர்சிக்கின்றனர். கமல்ஹாசன் இன்று தப்பு செய்கிறவர்கள் அதை உணராததற்கு காரணம் அது தப்புன்னு யாரும் தட்டிக்கேட்காததுதான் என்கிறார்.

ரெட் கார்டு மூலம் அசீமை வெளியேற்றுவாரா கமல்?

ரெட் கார்டு மூலம் அசீமை வெளியேற்றுவாரா கமல்?

கமல்ஹாசன் ப்ரமோவில் பேசியுள்ளதை பார்க்கும்போது அசீம் மீது கடும் நடவடிக்கை வரும், அது இப்போது மட்டுமல்ல எதிர்காலத்தில் கன்டஸ்ட்டண்டுகளுக்கும் பாடமாக இருக்கும் வகையில் இருக்கும், சாதாரணமாக போகிற போக்கில் நான் கூட கல்லூரி பருவத்தில் பெண்களை பேருந்தில் உரசியிருக்கிறேன் என்று சொன்ன சரவணன் ரெட்கார்டு கொடுத்து அனுப்பப்பட்ட பிக்பாஸ் வீடு இது இங்கு அசீமுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும், பிக்பாஸ் வீட்டிலிருந்து அசீம் ரெட்கார்டு கொடுத்து வெளியேற்றப்படுவார், ஹவுஸ்மேட்ஸ்கள் சுட்டிக்காட்டப்படுவார்கள், கோலார் சுட்டிக்காட்டப்படுவார் என்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம். அனைத்தும் வியாபார உலகம் அல்லவா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X