ரச்சிதாவை ட்ரிக்கர் செய்து சிக்க வைக்க அசீம் முயல்கிறார்..ரச்சிதாவின் கணவர் பேட்டி
10 ஆண்டுக்கு முன் பார்த்த ரச்சிதாவின் முகத்தை கொண்டுவர அசீம் முயல்கிறார். அதன் மூலம் பெயரை கெடுக்கலாம் என நினைக்கிறார்.
ரச்சிதா ராபர்ட் மாஸ்டரை ஹாண்டில் செய்வதில் வெற்றி பெற்றுள்ளார். கேப்டன் டாஸ்கில் ரச்சிதாவிற்கு அநீதி என கணவர் தெரிவித்துள்ளார்.
மைனாவும், ராபர்ட் மாஸ்டரும் இல்லாவிட்டால் ரச்சிதா ஃபைனலுக்கு வருவார் என ரச்சிதாவின் கணவர் தெரிவித்துள்ளார்.

அவரவர் கர்மாவை அவரவரே தீர்மானிக்கும் பிக்பாஸ் வீடு
பிக்பாஸ் வீட்டுக்குள் நடக்கும் கூத்துகள் நாளுக்கு நாள் சுவாரஸ்யத்தை கூட்டுகிறது. போட்டியாளர்கள் செய்யும் தவறுகள், மோசடிகள், சூழ்ச்சிகள், துரோகம், நட்பு போன்றவைகளால் பார்வையாளர்களால் வெறுக்கப்படவும், விரும்பப்படுவதும் நடக்கிறது. இதில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி நிதானமாகவும் நேர்மையாகவும், மற்றவர்களின் தூண்டிலில், வெறுப்பேற்றுதலில் சிக்காமல் பயணிப்பவர்கள் எளிதாக இலக்கை அடையவும் முடியும். இதில் அசீம் சிறப்பாக செயல்படுகிறார்.

வானிலை போல் மனநிலை மாறும் போட்டியாளர்கள்
அவ்வப்போது வானிலை மாறுவதுபோல் ஆயிஷா, தனலட்சுமி, ஜனனி, ஏடிகே உள்ளிட்டோர் மனநிலை மாறி சண்டைபிடிப்பதும் நடக்கிறது. இதில் மிகத்தெளிவாக விளையாடுபவர்கள் விக்ரமன், மணிகண்டன், ரச்சிதா போன்றோர் உள்ளனர். இதில் ராபர்ட் மாஸ்டர் போன்ற தொல்லைகளால் ரச்சிதா நிதானம் இழக்காமல் ஆடி வருகிறார். ஆனால் ரச்சிதா என்ன அலட்சியப்படுத்தினாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத ராபர்ட் மாஸ்டர் தினம் ஒரு ஸ்டைலில் ரச்சிதாவிடம் முயற்சி எடுக்கிறார்.

எச்சரிக்கும் ரச்சிதாவின் கணவர்
இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார் ரச்சிதாவின் கணவர். அவர் தனியார் யூடியூப் சானல்களுக்கு வளைத்து வளைத்து பேட்டி தருகிறார். அவருக்கும் ரச்சிதாவிற்கு சற்று பிரச்சினை என்று தகவல் கசியும் நிலையில் அவர் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் பேட்டி அளித்து வருகிறார். ரச்சிதா தெளிவான பெண் அவருக்கு ஒருவரின் நடத்தையை எளிதாக அளக்கத்தெரியும், ராபர்ட் மாஸ்டரை அவர் தெளிவாக சமாளித்து வருகிறார். ராபர்ட் மாஸ்டர் பிரச்சினை ஒருபக்கம் என்றால் மைனா, அசீம் பிரச்சினை ஒருபக்கம் என்கிறார்.

அசீம் ரச்சிதாவை ட்ரிக்கர் செய்கிறார்
அசீம் 10 ஆண்டுகளுக்கு முன் ரச்சிதாவுடன் ஒன்றாக நடித்தவர். அவருக்கு ரச்சிதா பற்றி நன்கு தெரியும். ரச்சிதாவின் 10 ஆண்டுக்கு முன் உள்ள மனநிலையை கொண்டுவர முயற்சிக்கிறார். ஒரு மனிதர் ஆண்டுகள் மாற மாற மெச்சூரிட்டி ஆவார் என்பது அசீமுக்கு தெரியாதா? அவரது பழைய கோபம், உணர்ச்சி வசப்படுதல் இப்போதும் இருக்கும் என அசீம் நினைத்து அதை கொண்டுவர ரச்சிதாவை ட்ரிக்கர் செய்கிறார் ஆனால் அது நடக்காது, ரச்சிதா வெகுவாக நிதானப்பட்டுவிட்டார் என்று தெரிவித்தார்.

மைனா-ராபர்ட் மாஸ்டர் பிரச்சினை
அதேபோல் மைனா ரச்சிதாவின் தோழி. ஒரு தோழிக்கு தனது தோழியின் பிளஸ் மைனஸ் தெரியும் அதை வைத்து அவர் விளையாட நினைக்கிறார். இது தவறான ஒன்று. அவரவர் அவரவர் திறமையில் வெல்லணும் என்று சொன்னவர், ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவிடம் அத்துமீறி அநடப்பது அவரது நடைமுறை தந்திரமாக கூட இருக்கலாம், யாராவது அவருக்கு அறிவுரையாக உள்ளே போனவுடன் உனக்கென்று ஒரு கதையை உருவாக்கிக்கொள் என்றுகூட சொல்லியிருக்கலாம் அதனால் அவர் இவ்வாறு நடக்கலாம் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











