Don't Miss!
- Automobiles
சுஸுகியும் கோதாவுல இறங்க போகுது... ஓலாவுக்கு மட்டுமல்ல ஹீரோ விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கும் ஆப்பு உறுதி!
- News
இதுதான் டாடா.. A டூ Z எல்லாமே பக்கா ஸ்கெட்ச்.. மின்சார கார் சந்தையில் டாடா போடும் மெகா பிளான்
- Lifestyle
Today Rasi Palan 28 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்பிற்கான பலன் தேடி வரப்போகிறது...
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
அடித்து துவைக்கும் அசீம்..கேப்டன்ஷிப்பில் கலக்குவதால் ஹவுஸ் மேட்ஸ் கலக்கம்
இந்த வார கேப்டன் டாஸ்கில் வெற்றி பெற்ற ஆசீம் அதிரடி காட்டி வருகிறார்.
காலையிலிருந்து ஒவ்வொருவரையும் உட்கார விடாமல் குரூப் பிரிப்பதிலும் பொருட்களை பிரித்துக் கொடுப்பதிலும் வேலை வாங்குவதிலும் அசீம் மும்மூரமாக இருக்கிறார்.
அசிமின் இந்த அதிரடி நடவடிக்கையை வேறு வழியில்லாமல் சகித்துக் கொள்ளும் ஹவுஸ் மேட்சுகள் லேசாக முனங்கி வருகின்றனர்.
ஆசீம்
சண்டை
போடுவார்..விக்ரமன்
நியாயத்தை
கேட்பார்..சத்தமே
இல்லாமல்
சண்டையை
மூட்டிவிட்ட
பிக்பாஸ்!

ஆண்கள் மட்டுமே கொண்ட சமையல் டீம்-அசீமின் அதிரடி
பிக்பாஸ் வீட்டில் வரவர அந்த வார்த்தை வழி நடத்த கேப்டன் தேர்ந்தெடுக்கப்படுவார். கடந்த வாரம் கேப்டனாக தேர்வு செய்யப்படாமல் போன தனலட்சுமி நான் கேப்டனாக வந்திருந்தால் சமையலுக்கு ஆட்களை மாற்றி போட்டிருப்பேன் சமையல் தெரியாதவர்களும் கற்றுக் கொள்ளட்டும் என்று பேசியிருந்தார். இதை அசீம் ஆதரித்திருந்தார். இந்த வாரம் கேப்டன் டாஸ்கில் அசீம் வென்றார். வென்றவுடன் தனது அதிரடியை ஆரம்பித்தார். சமையல் டீமில் சமையல் தெரியாத ராம்குமார் உள்ளிட்ட ஆண்களை மட்டுமே சேர்த்து பிரித்தார்.

50 நாளில் இல்லாத நடைமுறை
மற்ற அணிகளையும் அதே போன்று பிரித்தார். கேப்டன் ஆக பதவி ஏற்ற உடன் தனது அதிரடியை அசீம் தொடங்கினார். முதலில் ஒவ்வொருவருக்கும் டீம் பிரித்தவுடன் அவர்கள் வேலையை உடனடியாக செய்யும்படி கட்டளையிட்டார். அவரவர்கள் செய்கிறார்களா என்று பின்னாலே நின்று வழிகாட்டிக் கொண்டிருந்தார். பின்னர் ஸ்டோர் ரூமில் இருந்து வரவழைக்கப்பட்ட பால் பாக்கெட், ஆப்பிள் உள்ளிட்ட பழங்களை சரியாக பிரித்து கொடுத்தார். பால் பாக்கெட்டுகளை அவர் பிரித்த விதம் இதுவரை 50 நாளில் பார்க்காத ஒன்றாக இருந்தது. அவருடைய கேப்டன்ஷிப்பின் ஆளுமையை அது காட்டியது.

பங்கீடுகளை சரியாக செய்த அசீம்
மொத்த பால் பாக்கெட் களை எடுத்து ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்றாக பிரித்துக் கொடுத்தார். மீதம் இருந்த பால் பாக்கெட்களை நான்கு நான்கு பேருக்கு ஒரு பால் பாக்கெட் விகிதம் பிரித்து ஷேரிங் என்று வைத்துக் கொள்ளுங்கள் என்று கொடுத்தார். அப்படியும் ஒன்று மீதம் இருந்தது. அதை பொதுவாக்கி பிரிட்ஜில் வைக்க சொன்னார். பின்னர் ஆப்பிள்களை பிரித்து ஒவ்வொருத்தருக்கும் ஆப்பிள்களை அவரே விநியோகம் செய்தார். பின்னர் பொதுவாக இருக்கும் ஆப்பிள்களை ஃப்ரிட்ஜில் வைத்து எப்படி பிரித்துக் கொள்வது என்று கூறினார். தயிர் யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்.

சாப்பிடும் தட்டுகளை அவரவர் கழுவ உத்தரவிட்ட அசீம்
இடையில் சமையல் மற்ற வேலைகள் செய்பவர்களை போய் ஊக்கப்படுத்தினார். அவர்களுக்கு வேலையில் ஏதாவது பிரச்சனை இருந்தால் தான் வருவதாக தெரிவித்தார். சாப்பிடும் தட்டுகளை அவரவருக்கு பிரித்து பெயர் போட்டு அவரவர் சாப்பிட்ட தட்டுகள், கிளாஸ்களை அவரவரே கழுவ வேண்டும் என உத்தரவிட்டார். மாலையில் பிரிட்ஜை திறந்து அதை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். பிரிட்ஜில் இருந்த ஏகப்பட்ட குப்பைகளை எடுத்து வெளியே போட்டார். ஒரு மோசமான விஷயம் என்னவென்றால் மூன்று நான்கு வாரத்துக்கு முன்பிருந்த ஸ்வீட் பேப்பர் சுற்றப்பட்டு உள்ளே வைக்கப்பட்டிருந்தது.

இருக்கு இந்தவாரம் தரமான சம்பவம் இருக்கு
ஜனனி பாதி சாப்பிட்ட கேக் உள்ளே இருந்தது. யாரும் சாப்பிடாத மிச்சமான கேக் கொஞ்சம் உள்ளே வைக்கப்பட்டிருந்தது. இப்படி பல விஷயங்கள் உள்ளே இருந்தது. ரச்சிதா அவருடைய தட்டை ஃப்ரிட்ஜ்ஜுக்குள் வைத்திருந்தார் வெள்ளையாவற்றையும் எடுக்க சொல்லி அசீம் தெரிவித்தார். பிரிட்ஜை சுத்தப்படுத்தும் பணியை பின்னர் கிளினிங் டீமிடம் ஒப்படைத்தார். முதல் நாள் அசீமின் நடவடிக்கையை முனங்கிகொண்டே டீம் மேட்ஸ் சகித்துக்கொண்டனர். ஆனால் போக போக மோதல் வெடிக்கும், இந்தவாரம் தரமான சம்பவம் இருக்கும்.